/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரு கிராம மக்கள் மோதல் சம்பவம் சப் துணை கலெக்டர் தலைமையில் சமாதனம்
/
இரு கிராம மக்கள் மோதல் சம்பவம் சப் துணை கலெக்டர் தலைமையில் சமாதனம்
இரு கிராம மக்கள் மோதல் சம்பவம் சப் துணை கலெக்டர் தலைமையில் சமாதனம்
இரு கிராம மக்கள் மோதல் சம்பவம் சப் துணை கலெக்டர் தலைமையில் சமாதனம்
ADDED : ஆக 25, 2025 02:52 AM

புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவில் திருவிழாவில் இரு கிராமங்களுக்கு ஏற்றப ட்ட தகராறு தொடர்ந்து சப் கலெக்டர் தலைமையில் சமதானம் கூட்டம் நடந்தது.
முத்தியால்பேட்டை, சோலை நகர் பொன்னியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 2ம் தேதி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை பார்க்க வந்த கோட்டக்குப்பம் நடுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜ், ஜெகன், அருண், ஏழுமலை, வினோத்குமார் ஆகியோர் மதுபோதையில் அங்கு நடனம் ஆடியபோது, அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சிலர் தட்டிக்கேட்டனர். இதனால் இரண்டு கிராம மக்களிடையே விரோதம் ஏற்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி சப் கலெக்டர் இஷிதா ரெட்டி முன்னிலையில் நேற்று இரண்டு கிராம மக்களிடையே சமாதன பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் இரு கிராம மக்களிடையே உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ ., சக்கரபாணி, தி.மு.க., சேர்மன் ஜெயமூர்த்தி முன்னிலையில் இரு கிராம மக்கள் கை குலுக்கி கொண்ட னர்.
அமைதிப்பேச்சிக்கான ஏற்பாட்டினை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் செய்திருந்தனர். இதையடுத்து கோட்டக்குப்பம், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெருவதாக போலீசார் உத்திரவாதம் அளித்துள்ளனர்.