/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 667 சீட்டுகளுக்கு இன்று நேரடி கலந்தாய்வு
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 667 சீட்டுகளுக்கு இன்று நேரடி கலந்தாய்வு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 667 சீட்டுகளுக்கு இன்று நேரடி கலந்தாய்வு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 667 சீட்டுகளுக்கு இன்று நேரடி கலந்தாய்வு
ADDED : ஆக 25, 2025 02:49 AM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 667 சீட்டுகளுக்கு இன்று நேரடி கலந்தாய்வு நடக்கின்றது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்தி, நிரப்பப்பட்டு வருகின்றது. இதில் 34 படிப்புகளில் 667 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலி இடங்களை நேரடி முறையில் நிரப்ப பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே கியூட் தேர்வு எழுதி பல்கலைக்கழக 4 ஆண்டு யூ.ஜி., பி.டெக்., இந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அந்தந்த துறைகளுக்கு இன்று 25ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பதிவு செய்து இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும் இதே நேரத்தில் கலந்தாய்வு நடக்கின்றது. கியூட் தேர்வு எழுதாத மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. கலந்தாய்வுக்கு நேரில் தான் வர வேண்டும்.
ஆன்-லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்க ரிப்போர்ட் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி.ஏ., பொருளாதார படிப்பில் பொது-6, ஓ.பி.சி., என்.சி.எல்.,-3, எஸ்.சி.,-3, எஸ்.டி., -2, இ.டபுள்யூ.எஸ்., -2, மாற்றுதிறனாளிகள்-2 என 18 சீட்டுகள் காலியாக உள்ளன.