/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார்லிமென்ட் கமிட்டி தலைவருடன் நாராயணசாமி சந்திப்பு
/
பார்லிமென்ட் கமிட்டி தலைவருடன் நாராயணசாமி சந்திப்பு
பார்லிமென்ட் கமிட்டி தலைவருடன் நாராயணசாமி சந்திப்பு
பார்லிமென்ட் கமிட்டி தலைவருடன் நாராயணசாமி சந்திப்பு
ADDED : ஆக 25, 2025 02:54 AM

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வந்த பார்லிமென்ட் கமிட்டி தலைவர் திக் விஜய சிங்கை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
புதுச்சேரிக்கு பார்லிமென்ட் கமிட்டி தலைவர் திக் விஜய சிங் நேற்று வந்தார். ஆரோவில் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள சூழ்நிலை குறித்தும் கேட்டு அறிந்தார். பின்னர் அவர், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி னார்.
அவரை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
அதில், புதுச்சேரியின் அரசியல் சம்பந்தமாக ஆலோசனை செய்தார். அப்போது, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., துணைத்தலைவர் அனந்தராமன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.