/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருவிழாவிற்கு நன்கொடை வழங்கல்
/
கோவில் திருவிழாவிற்கு நன்கொடை வழங்கல்
ADDED : ஆக 25, 2025 02:55 AM

புதுச்சேரி : அரியாங்குப்பம் சுதானா நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் 18 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தின விழா, கடந்த 18 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செல்வகணபதி ஏற்பாட்டில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து சதுர்த்தி விழாவிற்காக ரூ. 10 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துரத்தினம் முன்னிலையில் நன்கொடையாக வழங்கினார். முன்னதாக சிறுமிகள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு ரவி பாண்டுரங்கன் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜா, அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர் பாலு, காத்தவராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.