/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை
/
அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை
ADDED : ஆக 04, 2025 12:00 AM

புதுச்சேரி : புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 44ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 44வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
முன்னதாக, அங்காள பரமேஸ்வரி சுவாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, காலை 7:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை நடந்த ஏகதின லட்சார்ச்சனையில் பக்தர்கள், கடவுளுக்குரிய ஆயிரம் திருநாமங்களை கூறி, பூக்களை துாவி அர்ச்சனை செய்து, சகஸ்ரநாமம் கூறி வழிப்பட்டனர்.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.