/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடும்ப பிரச்னை வெல்டர் தற்கொலை
/
குடும்ப பிரச்னை வெல்டர் தற்கொலை
ADDED : ஆக 03, 2025 11:59 PM
பாகூர் : வெல்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் தினகரன், 34; வெல்டர். இவரது மனைவி வெண்ணிலா. ஒரு மகன் உள்ளார். தினகரனுக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் மாலை மீண்டும் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. வெண்ணிலா கோபித்துக் கொண்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மனமுடைந்த தினகரன் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை, மீட்டு, கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து தினகரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.