/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு
/
சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு
ADDED : ஆக 03, 2025 03:45 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் சிறுத்தை நடமாட்டமா, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு வக்ரகாளியம்மன் கோவில் தெரு அருகேயுள்ள சீமகருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு திருக்கனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் புதுச்சேரி வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை பொதுமக்கள் தெரிவித்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான தடயங்கள் ஏதேனும் உள்ளதா என, ஆய்வு மேற்கொண்டார். ஆனால், ஆய்வுக்கு பின் அதற்கான தடயங்கள் எதுவும் தெரியவில்லை என, வனத்துறை ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.