/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷனை எம்.எல்.ஏ., முற்றுகை முத்தியால்பேட்டையில் பரபரப்பு
/
போலீஸ் ஸ்டேஷனை எம்.எல்.ஏ., முற்றுகை முத்தியால்பேட்டையில் பரபரப்பு
போலீஸ் ஸ்டேஷனை எம்.எல்.ஏ., முற்றுகை முத்தியால்பேட்டையில் பரபரப்பு
போலீஸ் ஸ்டேஷனை எம்.எல்.ஏ., முற்றுகை முத்தியால்பேட்டையில் பரபரப்பு
ADDED : ஆக 03, 2025 03:45 AM

புதுச்சேரி: உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரிமுத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, சோலை நகரைச் சேர்ந்தவர் தினகரன், 62;முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.., உதவியாளராக உள்ளார். இவர், முத்தியால்பேட்டை வி.ஏ.ஓ.,விடம்,டி.வி.நகரை சேர்ந்த செந்தில் என்பவர் சான்றிதழ் கேட்டு வந்தால் கொடுக்க வேண்டாம் என, தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செந்தில் சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ.,விடம் சென்றபோது, எம்.எல்.ஏ., உதவியாளர் தினகரன் தங்களிடம் சான்றிதழ் கொடுக்க வேண்டாம் என, கூறியுள்ளதாக தெரிவித்தார். இதனால், கோபமடைந்த செந்தில் வி.ஏ.ஓ.,விடம் தினகரனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தினகரன் கடந்த 29ம் தேதி முத்தியால்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்திபிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., நேற்று மதியம் தனது ஆதரவாளர்களுடன் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., விடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, செந்தில் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.