/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தின கால்பந்து போட்டி சோமன் அணி முதலிடம்
/
சுதந்திர தின கால்பந்து போட்டி சோமன் அணி முதலிடம்
ADDED : ஆக 21, 2025 06:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி கால்பந்து நண்பர்கள் கழகம் சார்பில், சுதந்திர தின கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி கால்பந்து நண்பர்கள் கழகம் சார்பில் 23ம் ஆண்டு சுதந்திர தின கால்பந்து போட்டி, ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. மூன்று நாள் நடைபெற்ற இப்போட்டியில் புதுச்சேரி தமிழகத்தை சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டிக்கு, சோமன் கால்பந்தாட்ட அணியும், காமராஜர் கால்பந்தாட்ட அணியும் தகுதி பெற்றன. இதில், சோமன் கால்பந்தாட்ட அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், சபாநாயர் செல்வம், ரிச்சர்ட் எம்.எல்.ஏ.,பாஜ., மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், மோடி மக்கள் நலப் பேரவை தலைவர் பிரபுதாஸ், பா.ஜ., இளைஞரணி தலைவர் வருண், சுரேஷ், கால்பந்து சங்க மாநில செயலாளர் தனசேகர் ஆகியோர் முதலிடம் பிடித்த சோமன் கால்பந்தாட்ட அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுக்கோப்பை வழங்கினர்.
இதேபோல், இரண்டாம் இடம் பிடித்த காமராஜர் கால்பந்தாட்ட அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த ஜி.எஸ்.டி., சென்ட்ரல் எக்சைஸ் சென்னை அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை, நான்காம் இடம் பிடித்த கால்பந்து நண்பர்கள் கழக அணிக்கு ரூ. 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.