/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் நிர்வாக அதிகாரிக்கு பணி ஆணை வழங்கல்
/
கோவில் நிர்வாக அதிகாரிக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : ஆக 20, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : திருபுவனை பழண்டிமாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட பாலகுமாருக்கு முதல்வர் ரங்கசாமி, பணி ஆணை வழங்கினார்.
திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகாவின் பரிந்துரையின் பேரில், திருபுவனை கிராமத்தில் உள்ள பழண்டிமாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியாக பாலகுமார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி பாலகுமாருக்கு நிர்வாக அதிகாரிக்கான பணி ஆணையை வழங்கி வாழ்த்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா மற்றும் என்..ஆர்., காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.