/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாஜ்பாய் நுாற்றாண்டு நினைவு மாநில கைப்பந்து போட்டி
/
வாஜ்பாய் நுாற்றாண்டு நினைவு மாநில கைப்பந்து போட்டி
வாஜ்பாய் நுாற்றாண்டு நினைவு மாநில கைப்பந்து போட்டி
வாஜ்பாய் நுாற்றாண்டு நினைவு மாநில கைப்பந்து போட்டி
ADDED : ஆக 21, 2025 06:45 AM

புதுச்சேரி : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்றாண்டு பிறந்த நாளையொட்டி நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ. மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
புதுச்சேரி இளம் தலைமுறை வாலிபால் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. லாஸ்பேட்டை சாய் உள் விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியை, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பரிசு வழங்கினர். அதில், முதலிடம் பிடித்த சுதந்திர பறவை வாலிபால் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த சுந்தரம் பிரதர்ஸ் வாலிபால் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.10 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த ஸ்பைடர் வாலிபால் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.5 ஆயிரம், நான்காம் இடம் பிடித்த காமராஜர் வாலிபால் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் வாஜ்பாய் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது.