/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஆக 26, 2025 07:49 AM
புதுச்சேரி : புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நாகமுத்து, 87; ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை உதவி பொறியாளர். இவர், கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகமுத்துவை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், அவர் மீது போக்சோ விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட நாகமுத்துவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நாகமுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.