/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு நிலுவை தொகை
/
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு நிலுவை தொகை
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு நிலுவை தொகை
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு நிலுவை தொகை
ADDED : ஆக 26, 2025 07:47 AM
புதுச்சேரி : பொதுப்பணித்துறை பல்நோக்கு மற்றும் பணி ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 510 பல்நோக்கு (எம்.டி.எஸ்) மற்றும் 3 பணி ஆய்வாளர்கள், அவர்களுக்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அதிக ஊதியம் பெறுவதை மேற்கோள் காட்டி, ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வேண்டி கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை முதல்வர் ரங்கசாமி பரிசீலித்து, அவர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை உடனே வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில், 510 பல்நோக்கு மற்றும் 3 பணி ஆய்வாளர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ரூ. 13 கோடி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.