/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1 கோடி கேட்டு இன்ஸ்.,சை மிரட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
/
ரூ.1 கோடி கேட்டு இன்ஸ்.,சை மிரட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ரூ.1 கோடி கேட்டு இன்ஸ்.,சை மிரட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ரூ.1 கோடி கேட்டு இன்ஸ்.,சை மிரட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ADDED : ஆக 26, 2025 08:53 AM
புதுச்சேரி: எஸ்.பி., மீதான வழக்கை வாபஸ் பெற, 1 கோடி பணம் கேட்டு இன்ஸ்பெக்டரை த.வா.க., நிர்வாகி மிரட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, பாலியல் வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற, அக்கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர், எஸ்.பி., செல்வத்திடம் 1 கோடி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, கடந்த 31ம் தேதி ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை சந்தித்த த.வா.க., சமூக ஊடகவியல் பொறுப்பாளர் பாபு, 'மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் அனுப்பியதாகவும், எஸ்.பி., மீதான புகாரை முடித்து வைக்க, அவர் தருவதாக கூறிய 60 லட்சத்தை தராமல் காலம் கடத்துகிறார். நீங்கள் பேசி பணத்தை வாங்கி கொடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் புகாரில், ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் ராஜன், த.வா.க., சமூக ஊடக பொறுப்பாளர் பாபு, மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான ஸ்ரீதரை பிடிக்க இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை ஸ்ரீதரை கைது செய்ய முடியாமல் தனிப்படை போலீசார் திணறினர்.
இந்நிலையில், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீசார் பதிவு செய்த வழக்கு கோப்புகளை சி.பி.சி.ஐ.டி., பிரிவில் ஒப்படைத்தனர். அதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் இவ்வழக்கை விசாரிக்க உள்ளனர்.