/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட எலும்பு கூடால் பரபரப்பு
/
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட எலும்பு கூடால் பரபரப்பு
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட எலும்பு கூடால் பரபரப்பு
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட எலும்பு கூடால் பரபரப்பு
ADDED : ஜன 14, 2025 06:15 AM
பாகூர்: பாகூர் அருகே தென்பெண்ணைஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மனித எலும்பு கூடால் பரபரப்பு ஏற்பட்டது.
பெஞ்சல்புயல் காரணமாக கடந்த மாதம் பெய்த மழையால் தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இருபுற கரைகளையும் தொட்டு சீறிப்பாய்ந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து சீராக செல்கிறது.
இந்நிலையில், பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் நவாம்மாள் கோவில் பகுதியில் தென் பெண்ணையாற்றங் கரையில் முள்புதரில் மிகவும் சிதைந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று சிக்கி கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து பாகூர் போலீசாருக்கு, தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரையோர பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த உடல் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
தென்பெண்ணையாற்றில் எலும்புக்கூடு மிதந்து வந்த சம்பவம் பாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

