பீஹாரில் நிதிஷ் குமார் வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!
பீஹாரில் நிதிஷ் குமார் வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!
UPDATED : நவ 14, 2025 10:42 PM
ADDED : நவ 14, 2025 01:22 PM

நமது சிறப்பு நிருபர்
பீஹாரில் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு 5 விஷயங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.
பீஹார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. தேஜ கூட்டணி 202 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு 5 விஷயங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது ஆட்சியைப் பிடிக்க பக்கபலமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு 1.3 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. இது வழக்கத்தை விட தேஜ கூட்டணிக்கு பெண்களின் ஓட்டுகளை அதிகரிக்க செய்துள்ளது.
தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது. இது தேஜ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றால் மாதம் ரூ.2500 தருவதாக அளித்த வாக்குறுதியை நம்புவதற்குப் பதிலாக, பெண்கள் நிதிஷ் குமார் மீதான தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தினர். 1.2 கோடி மூத்த குடிமக்களுக்கான முதியோர் ஓய்வூதியத்தை நிதிஷ் குமார் ரூ.400 லிருந்து ரூ.1,100 ஆக உயர்த்தியது ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மூத்த குடிமக்கள் இதை நிதிஷ் குமாரிடமிருந்து கிடைத்த பெரிய பரிசாகக் கருதினர். இதனால் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கிறது. பீஹார் மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர்.

