UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 08:42 AM

சென்னை :
'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
'கல்லுாரி கல்வி இயக்குநராக, அரசு கல்லுாரியின் மூத்த பேராசிரியரை நியமிக்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், நாளை கல்லுாரி கல்வி இயக்குனரகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை சார்பில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில், நேற்று பேச்சு நடந்தது.
பேராசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று, நாளை நடத்தவிருந்த முற்றுகை போராட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.