UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 08:29 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவருக்கும், உடுமலையில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கோமதி நல்லாசிரியர் விருது பெற்றார்.விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்தது.
கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாரதி, மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சார்பில் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேசமணி, வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற (பொள்ளாச்சி வடக்கு) நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் விஜயலட்சுமிக்கு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில் உடுமலை தாலுகா ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்க தலைவர் ரங்கராஜ், துணைத்தலைவர் ஆறுமுகம் உட்பட சங்க பொறுப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ், தமிழாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர் அமல்ரோஸ்மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.