ADDED : ஆக 11, 2025 03:07 AM

வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறித்து ஜனநாயகத்திற்கு முடிவுரை எழுதும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. ஊழலில் பல்கலையாகவும், தேர்தல் முறைகேடுகளில் உலக பல்கலையாகவும் இக்கட்சி திகழ்கிறது. வாக்காளர் பட்டியலில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர்களை நீக்கி, போலி வாக்காளர்களின் பெயர்களை சேர்த்துள்ளது.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
நீதிமன்றத்திற்கு செல்க!
காங்கிரசின் ராகுல் தெரிவிக்கும் 'ஓட்டு திருட்டு' புகார், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது, மஹாரா ஷ்டிரா மக்களை அவமதிக்கும் செய ல். இக்குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அல்லது தேர்தல் கமிஷனில் அவர் முறையிட வேண்டும். பொதுவெளியில், இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டு களை சுமத்தக்கூடாது.
ஏக்நாத் ஷிண்டே மஹா., துணை முதல்வர், சிவசேனா
அரசின் கைப்பாவை!
தேர்தல் கமிஷன், அரசியலமைப்பின் அங்கமாக திகழ வேண்டும். தற்போது இது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், உண்மையான நபர்களை நீக்கிவிட்டு போலி வாக்காளர்களை இணைக்கும் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
எம்.ஏ.பேபி பொதுச்செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,