
சம்பல் வன்முறை தொடர்பாக, நீதித்துறை கமிஷன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், சதித்திட்டமே கலவரத்துக்கு காரணம் என்றும், அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்., - சமாஜ்வாதி ஆண்ட போது, சம்பலில் வலுக்கட்டாயமாக ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டனர்.
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
புல்லட் ரயில் திட்டம்!
தென் மாநிலங்களிலும் புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வரும். இது தொடர்பாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஹைதராபாத், சென்னை, அமராவதி, பெங்களூரு ஆகிய நகரங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் இருக்கும். இது தவிர, ஆந்திராவில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாலைகள் மாற்றப்படும். சந்திரபாபு
நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
விளக்கம் அளிக்க வேண்டும்! சீனாவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை, அந்நாடு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. சீனா உடனான உறவை இயல்பாக்க, நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,