காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் வீட்டில் ரூ.1.68 கோடி, தங்க கட்டிகள் பறிமுதல்
காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் வீட்டில் ரூ.1.68 கோடி, தங்க கட்டிகள் பறிமுதல்
ADDED : ஆக 16, 2025 12:18 AM

பெங்களூரு: கனிம தாதுக்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த வழக்கில், கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 1.68 கோடி ரூபாய் ரொக்கம், 6.75 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் சிக்கி இருப்பதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகை கர்நாடக மாநிலம், பல்லாரியின் சண்டூர் வனப்பகுதியில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்ட க னிம தாதுக்களை, உத்தர கன்னடாவின் கார்வார் பெலகேரி துறைமுகத்தில் வனப்பகுதியினர் சேமித்து வைத்திருந்தனர்.
இந்த கனிம தாதுவை திருடி, கப்பலில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக, கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் உள்ளிட்டோர் மீது 2010ல் கு ற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்தது. பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வ ழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி தீர்ப்பு அளித்த நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 44 கோடி ரூபாய் அபராதம் வி தித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சதீஷ் சைல் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது.
கனிம தாது கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது பற்றி அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கார்வாரில் உள்ள சதீஷ் சைல் வீடு, கோவா, மும்பை, டில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த 13, 14 தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள் பறிமுதல் இந்த சோதனையின்போது, 1.68 கோடி ரூபாய் ரொக்கம்; 6.75 கிலோ தங்கக் கட்டிகள்; சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று கூறி உள்ளது. இவை தவிர, சதீஷ் சைல் வங்கிக்கணக்கில் இருந்த 14.13 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.