sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்

/

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்

4


ADDED : ஆக 16, 2025 12:01 AM

Google News

4

ADDED : ஆக 16, 2025 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில், பெண்களுக்கான இலவச பஸ் சேவை திட்டத்தை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்து ள்ளது.

கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, 'தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், பெண்களுக்கு இலவச பஸ் சேவை அறிமுகப் ப டுத்தப்படும்' என, சந்திர பாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதன்படி, 'ஸ்தீரி சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பஸ் சேவை திட்டத்தை அமராவதியில் நேற்று அவர் துவக்கி வைத்தார்.

பின், பெண்களுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ், துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பஸ்சில் பயணம் செய்தனர்.

மாநிலம் முழுதும் வசிக்கும் சிறுமியர், பெண்கள், திருநங்கையர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைய முடியும் என மாநில அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

திருநங்கையர் பயணத்தின் போது, தங்களின் அடையாள அட்டையை காண்பித்தல் அவசியம் என் றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயி லாக மாநிலம் முழுதும் 2.62 கோடி பெண்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அரசு வசம் உள்ள, 11,449 பஸ்களில், 74 சதவீத பஸ்கள் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் என ஆந்திர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 1,942 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us