sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு வருகிறது கடிவாளம்; லோக்சபாவில் தாக்கலானது மசோதா

/

'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு வருகிறது கடிவாளம்; லோக்சபாவில் தாக்கலானது மசோதா

'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு வருகிறது கடிவாளம்; லோக்சபாவில் தாக்கலானது மசோதா

'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு வருகிறது கடிவாளம்; லோக்சபாவில் தாக்கலானது மசோதா

3


UPDATED : ஆக 21, 2025 10:05 AM

ADDED : ஆக 21, 2025 01:52 AM

Google News

3

UPDATED : ஆக 21, 2025 10:05 AM ADDED : ஆக 21, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பணம் வைத்து விளையாடும், 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான, 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது சட்டமானால், விதிகளை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

நம் நாட்டில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிய பலர், தங்கள் சேமிப்பை இழந்ததுடன், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளன.

ஆன்லைன் சூதாட்டங்களால் ஆண்டுதோறும் 45 கோடி பேர், 20,000 கோடி ரூபாய் வரை இழப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஒப்புதல்


ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு 2023ல் மத்திய அரசு, 28 சதவீதம் ஜி.எஸ்.டி., விதித்தது. நடப்பு நிதியாண்டு முதல், ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து கிடைக்கும் வெற்றி தொகைகளுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிது.

சட்டவிரோதமாக செயல்படும் பெட்டிங் கேம்கள் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் முறைப்படுத்துதல் சட்ட மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

குரல் ஓட்டெடுப்பின் வாயிலாக, இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அடுத்து, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு ஆன்லைன் கேமிங் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

அபராதம்


இந்த மசோதா சட்டமானால், ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இ - ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில், பரிசு மற்றும் டிராபி ஆகியவற்றை மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

சூதாட்டச் செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்த தடை, செயலிகளை தடை செய்வது உள்ளிட்டவை அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

விதிகளை மீறி விளம்பரம் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடை


ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அனுமதிக்கக்கூடாது என, மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு காரணமாக, ஆன்லைன் கேம்களால் பணம் வசூலிக்க முடியாத நிலை உருவாகும்.

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, இது மறைமுகமாக தடையை ஏற்படுத்தும்.

ஆன்லைன் பேன்டசி விளையாட்டுகள் முதல் போக்கர், ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் லாட்டரி ஆகியவை இந்த மசோதா வாயிலாக தடை செய்யப்படும்.

கிரிக்கெட் வருவாய் பாதிக்கும்

ஆன்லைன் விளையாட்டு தளங்களான 'ட்ரீம் 11' மற்றும் 'மை ட்ரீம் சர்க்கிள்' போன்றவை, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளனர். குறிப்பாக, ஐ.பி.எல்., போட்டிகளில் இந்த நிறுவனங்களின் வாயிலாக பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. புதிய மசோதாவால், இந்த வருவாய் பாதிக்கப்படலாம் என, பிரபல விளையாட்டுத்துறை வழக் கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா தெரிவித்துள்ளார்.



2 லட்சம் பேர் வேலை இழப்பர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, 'அகில இந்திய கேமிங் பெடரேஷன், இ - கேமிங் பெடரேஷன், இந்திய பேன்டசி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன்' ஆகியவை இணைந்து, கடிதம் அனுப்பி உள்ளன. அதில் கூறியிருப்பதாவது: பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால், 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பர். நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிக்கும், சட்டரீதியான, வேகமாக வளர்ந்து வரும் கேமிங் துறைக்கு இந்த மசோதா, சாவு மணியாக அமைந்து விடும். ஆன்லைன் திறன் விளையாட்டு துறை, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானது. ஆண்டுக்கு 31,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இத்துறையால், அரசுக்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சி கண்டு வரும் கேமிங் துறை, 2028ம் ஆண்டில் இருமடங்கு வளர்ச்சி அடையும் சூழல் உள்ளது. 2020ல் ஆன்லைன் கேம் விளையாட்டில் பங்கேற்றவர்கள் 36 கோடி பேர் என்ற நிலையில், 2024ல் அது 50 கோடியாக அதிகரித்தது. சட்டரீதியான, முறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டால், சட்டவிரோத, முறைப்படுத்தப்படாத சூதாட்டங்கள் பெருகி, மக்கள் தங்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு, வரி விதிப்பு, பொறுப்பேற்பு ஏதுமின்றி மோசடி, ஏய்ப்பு ஆகியவற்றுடன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. பணம் சார்ந்த அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல், மின்னணு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்ற கவலையை, அரசின் கவனத்துக்கு தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us