UPDATED : ஆக 21, 2025 09:36 AM
ADDED : ஆக 21, 2025 03:42 AM

முதல்வர்கள்,
அமைச்சர்கள் பதவிகளை பறிக்கும் அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதாவை
மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் எதிர்க்கட்சிகள் ஆளும்
மாநிலங்களில் உள்ள முதல்வர்களை மிரட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது.
- சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி
தடை வேண்டாம்! '
ஆன்லைன்' சூதாட்டங்களை தடை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இது, இந்த துறையை ரகசியமாக இயங்க வழி செய்யும். அதற்கு பதில், இதை ஒழுங்குபடுத்தி வரி விதித்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். மக்களும் பணத்தை இழப்பது குறையும்.
- சசி தரூர், லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
அரசியலமைப்பு விதிமீறல்!
அரசியலமைப்பின்படி அரசு நிர்வாகம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை, நீதித்துறை ஆகியவற்றுக்கு அதிகாரம் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா இந்த அடிப்படையை மீறுவதாக உள்ளது.
- அசாதுதீன் ஒவைசி,தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,