sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுலின் 'ஓட்டு திருட்டு' வீடியோ போலி; ஆதாரத்துடன் முகத்தில் கரி பூசியது தேர்தல் கமிஷன்

/

ராகுலின் 'ஓட்டு திருட்டு' வீடியோ போலி; ஆதாரத்துடன் முகத்தில் கரி பூசியது தேர்தல் கமிஷன்

ராகுலின் 'ஓட்டு திருட்டு' வீடியோ போலி; ஆதாரத்துடன் முகத்தில் கரி பூசியது தேர்தல் கமிஷன்

ராகுலின் 'ஓட்டு திருட்டு' வீடியோ போலி; ஆதாரத்துடன் முகத்தில் கரி பூசியது தேர்தல் கமிஷன்

41


UPDATED : ஆக 21, 2025 10:07 AM

ADDED : ஆக 21, 2025 03:54 AM

Google News

41

UPDATED : ஆக 21, 2025 10:07 AM ADDED : ஆக 21, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பீஹாரில் மிகப் பெரிய அளவில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, ராகுல் பகிர்ந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என, தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், உண்மை என்னவென்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது.

இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்தோர் என, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.

இந்தச் சூழலில், பீஹாரில், 'ஓட்டுரிமை யாத்திரை' நடத்தி வரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மிகப் பெரிய அளவில் ஓட்டு திருட்டு நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.

அதற்கு ஆதாரமாக பீஹாரை சேர்ந்த வாக்காளர் சுபோத் குமார் என்பவரது வீடியோவையும் ராகுல் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தன் பெயர் நீக்கப்பட்டதாக சுபோத் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ராகுல் பகிர்ந்த வீடியோ குறித்து பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை:

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாக சுபோத் குமார் கூறியதில் உண்மை இல்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்குப் பின், சுபோத் குமார் குடும்பத்தினரின் பெயர்கள் நவாடா மாவட்டத்தின் 9ம் எண் ஓட்டுச்சாவடியில் இருந்து 10ம் எண் ஓட்டுச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், சுபோத்குமாரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இதுவரை பதிவு செய்யப்படவே இல்லை.

மேலும், பெயர் நீக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அவரது பெயர் இல்லை. ஓட்டுச்சாவடி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டபோது, சம்பந்தப்பட்ட பூத்தில் சுபோத் குமாரும் இருந்தார். ஓட்டுச்சாவடிக்கு வந்ததற்கு சான்றாக வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார்.

அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் படம் பிடிக்கப்பட்ட போட்டோவிலும் சுபோத் குமார் இடம்பெற்றுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது குறித்து பூத் அளவிலான அதிகாரிகள் கேட்டபோது, பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தையும் அவர் நிரப்பி தாக்கல் செய்யவில்லை.

தவிர, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும், பெயர் இல்லாதது குறித்து சுபோத் குமார் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை.

எனவே, சுபோத் குமார் எழுப்பிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. படிவம் - 6 நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை அவர் சமர்பித்தால், வாக்காளர் பட்டியலில் சுபோத் குமாரின் பெயர் சேர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிழையான புள்ளி விபரங்கள் வெளியிட்டவருக்கு நோட்டீஸ்

தேர்தல் ஆய்வாளரான சஞ்சய் குமார், சி.எஸ்.டி.எஸ்., எனப்படும், வளர்ந்து வரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த ஆய்வு மையத்திற்கு, மத்திய அரசின் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., எனப்படும், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், மானிய உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்த புள்ளி விபரங்களை கடந்த 17ம் தேதி, சஞ்சய் குமார் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், இரு சட்டசபை தொகுதிகளில் கணிசமான அளவுக்கு வாக்காளர்கள் குறைந்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், இந்த பதிவை சுட்டிக்காட்டி, ஓட்டு திருட்டு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். இந்தச் சூழலில், கடந்த 19ம் தேதி அன்று, மஹாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக வெளியிட்ட புள்ளி விபரங்கள் அனைத்தும் பிழையானவை எனக் கூறி, சஞ்சய் குமார் திடீர் பல்டி அடித்தார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில், பிழையான புள்ளி விபரங்களை வெளியிட்ட சஞ்சய் குமாரிடம் விளக்கம் கேட்டு ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன் விபரம்: சி.எஸ்.டி.எஸ்., தலைவர் சஞ்சய் குமார், மானிய உதவி விதிகளை மீறி பிழையான தேர்தல் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து, ஆராயாமல் ஊடகங்கள் ஒளிபரப்பிய செய்திகளையும் ஒருதலைபட்சமான விளக்கத்துடன் வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் உயர்வான அங்கமாக விளங்கும் தேர்தல் கமிஷனுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சி.எஸ்.டி.எஸ்., அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us