24 ஆண்டுகளில் இல்லாத நிலை: அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை சரிவு
24 ஆண்டுகளில் இல்லாத நிலை: அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை சரிவு
ADDED : ஆக 31, 2025 09:53 PM

புதுடில்லி: அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. 24 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க விசா நடைமுறைகள், வரி விதிப்பு, வெளி நாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு கெடுபிடிகள் என கடும் நடவடிக்கைகளை அந்நாட்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அவரின் நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகள் கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் அதே சூழலில், அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
இந்த விவரம், அமெரிக்க வர்த்தகத்துறை தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதில் இடம்பெற்று உள்ள விவரங்கள்;
2025ல் ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். கடந்தாண்டில் இதே கால கட்டத்தில் (ஜன-ஜூன்) அமெரிக்காவுக்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை என்பது 2.3 லட்சம் பேராகும். அதாவது, 5.5 சதவீதம் குறைந்துள்ளதாகும். இது, 24 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும்.
இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. 2025 ஜூனில் 6.2 சதவீதம் சரிவு காணப்படுகிறது. அமெரிக்கா தவிர்த்து, மற்ற மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே குறைந்துள்ளது.