எனக்கும் பசிக்கும்ல... சாப்பிட வேண்டாமா?: 'பாவ் பாஜி' வாங்கி சகாக்களை காட்டி கொடுத்த கொள்ளையன்
எனக்கும் பசிக்கும்ல... சாப்பிட வேண்டாமா?: 'பாவ் பாஜி' வாங்கி சகாக்களை காட்டி கொடுத்த கொள்ளையன்
UPDATED : ஜூலை 25, 2025 04:10 PM
ADDED : ஜூலை 25, 2025 01:52 AM

கலபுரகி: கர்நாடகாவின் கலபுரகியில், 3 கிலோ நகைகளை கொள்ளை அடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் சிக்கியது குறித்து ருசிகர தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம், கலபுரகி டவுன் சராப் பஜாரில் மரதுல்லா மாலிக் என்பவரின் நகைக்கடை உள்ளது.
மிரட்டல் கடந்த 11ம் தேதி காலை, நகைக்கடைக்கு முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் கும்பல், மரதுல்லா மாலிக்கை துப்பாக்கி முனையில் மிரட்டி கை, கால்களை கட்டிப் போட்டனர்.
கடையில் இருந்து, 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்த வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி பாரூக் அகமது முல்லிக், 40, அயோத்தியா பிரசாத் சவுஹான் , 48, சோகைல் ஷேக், 30 ஆகியோரை கடந்த 20ம் தேதி, கலபுரகி போலீ சார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் ஒருவரை தேடுகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 2.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. கொள்ளையர்கள் சிக்கியது குறித்து, தற்போது சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கல புரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா கூறிய தாவது:
மரதுல்லா மாலிக் கடையில் கொள்ளை அடித்து, தற்போது கைதாகியுள்ள மூவருடன் பாரூக் அகமது முல்லிக் என்பவரும் வந்துள்ளார். பாரூக்கை, நகைக்கடை முன் நிறுத்தி, யாரும் வருகின்றனரா என்று கண்காணிக்கும்படி கூறியுள்ளனர். மற்ற மூவரும் நகைக்கடைக்குள் சென்றனர்.
வெளியில் நின்றிருந்த பாரூக்கிற்கு பசிக்கவே, அருகில் இருந்த கடையில், 'பாவ் பாஜி' வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதற்கு, 30 ரூபாயை, 'போன் பே' மூலம் செலுத்தியுள்ளார். நகைக்கடையில் கொள்ளை அடித்த பின், மூன்று பேரும் வெளியே வரவும், அவர்களுடன் சேர்ந்து பாரூக்கும் தப்பினார்.
பொய் கண்காணிப்பு கேமரா கா ட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பாரூக், பாவ் பாஜி சாப்பிட்டதும், அதற்கு போன்பேயில் பணம் செலுத்தியதும் தெரிந்தது. இதை வைத்து, பாரூக்கின் மொபைல் போன் எ ண் கண்டுபிடிக்கப்பட்டது . அவரது நம்பரை டிராக் செய்து, கொள்ளையர்களை கைது செய்தோம்.
இதற்கிடையில், 805 கிராம் நகைகள் மட்டும் கொள்ளை போனதாக, உரிமையாளர் மரதுல்லா மாலிக் புகாரில் பொய்யான தகவல் அளித்திருந்தார். விசாரணையில், 3 கிலோ நகை கொள்ளை போனது தெரிந்தது. அவரிடமும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.