கேரளாவில் பஸ் மோதி விபத்து; 6 பேர் பலி; டிரைவரின் அலட்சியமே விபத்திற்குக் காரணம்!
கேரளாவில் பஸ் மோதி விபத்து; 6 பேர் பலி; டிரைவரின் அலட்சியமே விபத்திற்குக் காரணம்!
ADDED : ஆக 28, 2025 10:27 PM

திருவனந்தபுரம்: காசர்கோட்டில் கர்நாடகா பஸ் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டிரைவரின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என்பது விசாரணையில் அம்பலமானது.
கேரள மாநிலம் காசர்கோட்டில் கர்நாடக பஸ், சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹைதர் அலி (47), கதீஜா (50), ஸ்பாஹுல் ஹமீத்தின் மகள் ஹஸ்னா (10), நபீசா (52) மற்றும் ஆயிஷா ஃபிடா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த விபத்துக்கு, அதிவேகமும், டிரைவரின் அலட்சியமும் தான் காரணம் என்று கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது . மருத்துவச் செலவுகளை மாநகராட்சி ஏற்கும்.
14 வருட அனுபவம் கொண்ட டிரைவர் நிஜலிகப்பா சலவதி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பஸ் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.