sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி  நம்பிக்கை

/

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி  நம்பிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி  நம்பிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி  நம்பிக்கை

1


UPDATED : செப் 18, 2025 12:12 AM

ADDED : செப் 18, 2025 12:10 AM

Google News

UPDATED : செப் 18, 2025 12:12 AM ADDED : செப் 18, 2025 12:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''இந்தியா - அமெரிக்கா இடையே, நிலையான வர்த்தக ஒப்பந்தம் உருவாகும்; திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மீண்டும் எழுச்சி பெறும்,'' என, ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'இந்திய நிட் பேர் அசோசியேஷன்' ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 52வது 'இந்தியா இன்டர்நேஷனல் நிட் பேர்' என்ற பின்னலாடை கண்காட்சி, திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், நேற்று துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

Image 1470655


ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர்சேக்ரி, கண்காட்சியை துவக்கி வைத்தார். துணை தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் (அபாட்) கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன், ஐ.கே.எப்., அசோசியேஷன் நிர்வாகி ரோகிணி சூரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், ஏற்றுமதியாளர்கள் குழுவாக சென்று, ஒவ்வொரு ஸ்டால்களில் காட்சிப்படுத்தியுள்ள, பின்னலாடைகளை பார்வையிட்டனர்.



கண்காட்சியில், பருத்தி நுாலிழை பின்னலாடை, செயற்கை நுாலிழை பின்னலாடை, பனியன் துணி கழிவில் இருந்து உருவான நுால், பின்னல் துணி மற்றும் ஆடைகள், 'பெட் பாட்டில்' உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உருவான செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஆடைகள், முழுவதும் நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆடைகள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சி குறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் சேக்ரி கூறியதாவது:

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு, திருப்பூர் 'நிட்பேர்' கண்காட்சியில், அதிக அளவு பசுமை சார் உற்பத்தி ஆடைகள் இடம் பெற்றுள்ளன. நுாலிழை, பேப்ரிக் மற்றும் ஆடைகள், முழுவதும், வளர்ந்த நாடுகள் எதிர்பார்க்கும் வகையில், பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

'ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம்', மரம் வளர்ப்பு, மரபுசாரா எரிசக்தி உற்பத்தி என, கார்பன் உமிழ்வை கட்டப்படுத்துவதில், திருப்பூர் முன்னோடி தொழில் நகரமாக உயர்ந்துள்ளது பெருமை அளிக்கிறது. அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தற்காலிகமானது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். மற்ற போட்டி நாடுகளில், பசுமை சார் ஆடை உற்பத்தி கிடையாது; இந்தியா மட்டுமே முன்னோடியாக இருக்கிறது. அதன்படி, அமெரிக்க மக்களும், இந்திய ஆடைகளையே விரும்புகின்றனர்.

மத்திய அரசும் சிறப்பு கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறது; அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விரைவில், அமெரிக்கா - இந்தியா இடையே, நிலையான வர்த்தக ஒப்பந்தம் உருவாகும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மீண்டும் எழுச்சி பெறும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us