'கடல் சார்ந்த தொழில்களில் ரூ.80 லட்சம் கோடி முதலீடு குவியும்'
'கடல் சார்ந்த தொழில்களில் ரூ.80 லட்சம் கோடி முதலீடு குவியும்'
ADDED : செப் 18, 2025 12:08 AM

கொச்சி:மத்திய அரசின், 'மேரிடைம் அம்ரித் கால் விஷன்' என்ற கடல்வணிக நல்ல காலத்துக்கான பார்வை என்ற திட்டத்தால், கடல் சார்ந்த தொழில்களில் 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கவரப்படும் என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது:
அரசின் கடல் சார்ந்த தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டத்தின் கீழ், இன்னும் 10 ஆண்டுகளில், சாகர்மாலா உட்பட 840 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்காக, 5.80 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அவற்றில் 1.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 272 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. 12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
துறைமுகங்கள், கடல்வழி போக்குவரத்து இணைப்பு, துறைமுகங்களை சரக்குகள் விரைவாக சேருவதற்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.
அரசின் இந்த திட்டங்களில், 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என்றும் மொத்தம் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.