/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கட்டுமான நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகள்
/
கட்டுமான நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகள்
கட்டுமான நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகள்
கட்டுமான நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகள்
UPDATED : ஜூலை 30, 2025 07:19 AM
ADDED : ஜூலை 30, 2025 05:48 AM
புதுடில்லி: கடந்த நான்கு ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன், இரண்டு மடங்கு உயர்ந்து, 35.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, 'கோலியர்ஸ் இந்தியா' தெரிவித்துள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனாவுக்கு பின் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நிதிநிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. கடன் பெறுவது மற்றும் நிதி தொடர்பான தரநிலைகளில், இந்திய பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளைக் காட்டிலும், ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த வங்கிக் கடனில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு, கிட்டத்தட்ட 20 சதவீதமாக உள்ளது. இது துறை மீதான வங்கிகளின் நம்பிக்கை அதிகரித்து வருவதை காட்டுவதாக உள்ளது.
4 ஆண்டுகளில் 35.40 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது