/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க உதவி தேவை மத்திய அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

ADDED : ஆக 05, 2025 12:34 AM
புதுடில்லி, அமெரிக்காவின் வரி விதிப்பை சமாளிக்க, இந்திய ஏற்றுமதியாளர்கள், நிதியுதவி மற்றும் குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக வரிகள் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், உருக்கு, உணவு பதப்படுத்துதல், பொறியியல், கடல்சார் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி துறைகளுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளதாக, அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வட்டி மானியம், வரிகள் நீக்கம் நீட்டிப்பு, மத்திய -- மாநில வரிகள் தள்ளுபடி, நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துதல், நிதி சலுகைகளை நீட்டித்தல் மற்றும் அமெரிக்காவுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து, அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில், தொழில் துறையினரின் கோரிக்கையை அமைச்சகம் பரிசீலிப்பதுடன், மாநிலங்களுடன் இணைந்து ஏற்றுமதியாளர்களுக்கு உரிய ஆதரவை அரசு அளிக்கும் என உறுதியளிக்கப்பட்டது.