தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேர்தல் பணிகளில் முழு கவனம்: புதிய தலைவர்களுக்கு உத்தரவு

 தேர்தல் பணிகளில் முழு கவனம்: புதிய தலைவர்களுக்கு உத்தரவு

 தேர்தல் பணிகளில் முழு கவனம்: புதிய தலைவர்களுக்கு உத்தரவு


ADDED : செப் 17, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்துங்கள் என்று, காங்கிரசின் புதிய மாவட்ட தலைவர்களுக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள, பாரத் ஜோடோ காங்கிரஸ் பவனில், காங்கிரசின் புதிய மாவட்ட தலைவர்களுடன், கட்சியின் மேலிட தலைவர்கள் வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர், முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

மேலிட தலைவர்கள் இருவரும் பேசியதாவது:

கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களாக, தேர்வாகி உள்ள உங்களுக்கு வாழ்த்துகள். கட்சியின் மாநில தலைவர் ஹரிபிரசாத் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ, அ தை அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும். அவர் கூறுவதை மீறி செயல்பட்டா ல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த, 2023 சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்றோம். வரும் 2028 தேர்தலில் அதை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க வேண்டும். 2029 லோக்சபா தேர்தலிலும், காங்கிரஸ் கட்சியை அதிக தொகுதிகளில், வெற்றி பெற வைக்க வேண்டும்.

கட்சியை வலுப்படுத்துவதுடன், ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 100 பேரை கட்சியின் உறுப்பினர்கள் ஆக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இழுக்க வேண்டும். ஜி.பி.ஏ., உட்பட உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில், கட்சியை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு.

இவ்வாறு பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us