தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நடிகர் அனந்த நாகுக்கு 'தாதா சாஹேப் பால்க ே ' விருது

 நடிகர் அனந்த நாகுக்கு 'தாதா சாஹேப் பால்க ே ' விருது

 நடிகர் அனந்த நாகுக்கு 'தாதா சாஹேப் பால்க ே ' விருது


ADDED : செப் 17, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கன்னட திரையுலகின், மூத்த நடிகர் அனந்த் நாகுக்கு, 'தாதா சாஹேப் பால்க ே ' விருது கிடைத்துள்ளது. இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய திரையுலகில், மிக உயரிய விருதாக கருதப்படுவது, 'தாதா சாஹேப் பால்க ே ' விருதாகும். திரையுலகில் சிறந்த சாதனை செய்தவர்களை அடையாளம் கண்டு, இந்த விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டின் இந்த விருது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் அனந்த் நாகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகின், சாக்லேட் ஹீரோ என, பிரபலம் அடைந்தவர் அனந்த் நாக். இவரது நடிப்பில் திரைக்கு வந்த, அருண ராகா , இப்பனி கரகிது , கணேஷன மதுவே , பெங்கிய பலே, நா நின்ன பிடலாரே, கவுரி கணேஷா உட்பட, பல்வேறு திரைப்படங்கள் பொன் விழா படங்களாகும். அந்தந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

இப்போதும் பல படங்களில், துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார்.

திரையுலகில் இவர் செய்த கலைச்சேவையை, அடையாளம் கண்டு இவருக்கு ' தாதா சாஹேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கன்னடர்களுக்கு கிடைத்த கவுரவமாகும். இம்மாதம் 22ம் தேதியன்று, விருது வழங்கப்படவுள்ளது.

தேசிய அளவிலான விருது பெற்றுள்ள, நடிகர் அனந்த் நாகுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட, பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us