sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மேம்பாலம், சுரங்கப்பாதைகளில் துப்புரவு பணி: பெங்களூரு மத்திய மாநகராட்சியில் தீவிரம்

/

 மேம்பாலம், சுரங்கப்பாதைகளில் துப்புரவு பணி: பெங்களூரு மத்திய மாநகராட்சியில் தீவிரம்

 மேம்பாலம், சுரங்கப்பாதைகளில் துப்புரவு பணி: பெங்களூரு மத்திய மாநகராட்சியில் தீவிரம்

 மேம்பாலம், சுரங்கப்பாதைகளில் துப்புரவு பணி: பெங்களூரு மத்திய மாநகராட்சியில் தீவிரம்


ADDED : ஏப் 11, 2026 04:12 AM

Google News

ADDED : ஏப் 11, 2026 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: துாய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டு, பெங்களூரு மத்திய மாநகராட்சி துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் துப்புரவு செய்யப்படுகின்றன.

பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் கூறியதாவது:

குப்பையில்லாத மாநகராட்சியாக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்துள்ளோம். துாய்மை ஆய்வு 2025 - 26ல், தேசிய அளவில் சிறந்த இடத்தை பெற வேண்டும்.

எனவே, துாய்மை பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளை சுத்தம் செய்து, நான்கு டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது.

இதுவரை, 2-0 மேம்பாலங்கள், சுற்றுப்பகுதிகள், எட்டு சுரங்கப்பாதைகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. துப்புரவு பணியில் 334 துப்புரவு தொழிலாளர்கள், 161 ஆட்டோ டிப்பர் ஓட்டுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொது இடங்களில் அழகை காப்பாற்றவும், பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கிலும், ஏப்ரல் 13 வரை பிளக்ஸ், பேனர்கள், விளம்பர போர்டுகள் அப்புறப்படுத்தப்படும். கே.ஆர்.புரம், ஹொரமாவு, ராமமூர்த்தி நகர், விஜினாபுரா, பசவனபுரா, தேவசந்திரா, ஏ.நாராயணபுரா, விஞ்ஞான நகர், ஹெச்.ஏ.எல்., விமான நிலையம் பகுதிகளில், 812 பிளக்ஸ்கள் அ கற்றப்பட்டன.

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பது, தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் நபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us