sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜமீர் அகமது கான் மீது காங்., தலைவர்கள் அதிருப்தி கட்சிக்கு எதிராக பேசுவதாக குற்றச்சாட்டு

 ஜமீர் அகமது கான் மீது காங்., தலைவர்கள் அதிருப்தி கட்சிக்கு எதிராக பேசுவதாக குற்றச்சாட்டு

 ஜமீர் அகமது கான் மீது காங்., தலைவர்கள் அதிருப்தி கட்சிக்கு எதிராக பேசுவதாக குற்றச்சாட்டு


ADDED : ஏப் 11, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தாவணகெரே தெற்கு தொகுதியில், இடைத்தேர்தல் முடிந்த கையோடு, காங்கிரசில் அதிருப்தி பகிரங்கமாகியுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மீது, மறைமுகமாக அதிருப்தி தெரிவித்தனர்.

பெங்களூரின் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உட்பட சில முஸ்லிம் தலைவர்கள் நேற்று அளித்த பேட்டி:

தாவணகெரே தெற்கு தொகுதியில், சிறுபான்மையின தலைவர்களுடன் கலந்தாலோசித்து, சமர்த்துக்கு சீட் அளிக்கப்பட்டது. அவருக்கு எதிராக பொய்யான அவப்பிரசாரம் செய்யப்பட்டது, ஆனால், அவர் வெற்றி பெறுவார் என, நம்புகிறோம்.

தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகளில் அனைத்து சமுதாயத்தினரும், காங்கிரசுக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஆனால், தேர்தல் நேரத்தில், சிறுபான்மையினருக்கு காங்கிரசில் அநியாயம் நடந்ததாக, பா.ஜ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., மற்றும் சுயேச்சைகள் குற்றம்சாட்டினர். எங்கள் கட்சியில் சிலரும், இது போன்று குற்றம்சாட்டினர். அது சரியல்ல.

நாவணகெரே தெற்கில், சிறுபான்மையினருக்குசீட் தர வேண்டும் என, கோரிக்கை வந்தது உண்மை தான். கட்சியும் கூட இதை ஆமோதித்தது. எம்.எல்.சி., அப்துல் ஜப்பாரும், சீட் கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆனால், இதுகுறித்து, தொகுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அவருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதே கூட்டத்தில், அமைச்சர் மல்லிகார்ஜுன், 'மறைந்த சாமனுார் சிவசங்கரப்பாவின் பதவி காலம் முடியாததால், இம்முறை எங்கள் குடும்பத்தினருக்கே சீட் தாருங்கள்' என்று கோரினார். எனவே, அமைச்சர் ஜமீர் அகமது கான் தலைமையில், நாங்கள் சேர்ந்து சமர்த்துக்கு சீட் தர ஒப்புதல் அளித்தோம்.

அவருக்காக பிரசாரம் செய்தோம். ஆனால், சிலர் பிரசாரத்துக்கு வரவில்லை. காங்கிரசில் சிறுபான்மையினருக்கு அநியாயம் நடந்ததாக, தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சமர்த் வேட்பாளராவதில், உடன்பாடு இல்லை என்றால், ஆலோசனை கூட்டத்தில் ஒப்புக்கொண்டது ஏன்? எங்கள் கட்சியின் சில தலைவர்களே, தாவணகெரே தெற்கில் சதி செய்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us