sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லஞ்சம் வாங்கிய அதிகாரியை விரட்டி பிடித்த லோக் ஆயுக்தா

 லஞ்சம் வாங்கிய அதிகாரியை விரட்டி பிடித்த லோக் ஆயுக்தா

 லஞ்சம் வாங்கிய அதிகாரியை விரட்டி பிடித்த லோக் ஆயுக்தா


ADDED : ஏப் 11, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: ஒப்பந்ததாரரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தப்பியோடிய அதிகாரியை லோக் ஆயுக்தா அதிகாரிகள் விரட்டி பிடித்தனர்.

ராய்ச்சூர் மாவட்டத்தின் சிரிவாரா பட்டண பஞ்சாயத்து தலைமை அதிகாரி சுரேஷ் ஷெட்டி. பட்டண பஞ்சாயத்து சார்பில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், பில் தொகை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தார். பில் தொகையை வழங்காமல், சுரேஷ் ஷெட்டி இழுத்தடித்தார்.

பில் பாக்கியை தர வேண்டுமானால், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, நெருக்கடி கொடுத்தார். இதுகுறித்து லோக் ஆயுக்தாவில், ஒப்பந்ததாரர் புகார் செய்தார். லோக் ஆயுக்தா அதிகாரிகளும், நேற்று முன்தினம் சுரேஷ் ஷெட்டி அலுவலகத்துக்கு சென்றனர். அதே நேரத்தில், ஒப்பந்ததாரரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சுரேஷ் ஷெட்டி, லோக் ஆயுக்தா அதிகாரிகளை கண்டதும், பீதியடைந்து பணத்துடன் அங்கிருந்து காரில் தப்பியோடினார்.

அதிகாரிகளும் விடாமல் காரில் விரட்டி சென்று, அவரை மடக்கி பிடித்து, கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us