sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 ல் நடந்த அறிவியல் நிகழ்வுகள்

/

2023 ல் நடந்த அறிவியல் நிகழ்வுகள்

2023 ல் நடந்த அறிவியல் நிகழ்வுகள்

2023 ல் நடந்த அறிவியல் நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துளிகள்

பிப்.10: மூன்று செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது 500 கிலோவுக்கு குறைவான செயற்கைக்கோளை ஏந்தி செல்லும்.

மார்ச்26: 'எல்.வி.எம்3-எம்3' ராக்கெட்டில், பிரிட்டனின் 'ஒன் வெப்' நிறுவனத்தின் 36 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

ஏப்.2: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்தது.

ஏப்.4: நாசாவின்'ஆர்டிமிஸ்' திட்டத்தில் நிலவுக்கு செல்வதற்கு முதல் பெண் கிறிஸ்டினா கோச் உட்பட விக்டர் கிளவர், ரெய்ட் விசர்மன், ஜெர்மி ஹான்சன் ஆகிய 4 வீரர்கள் தேர்வு.

ஏப்.17: வியாழனை ஆய்வு செய்ய 'ஜூஸ்' விண்கலத்தை நாசா விண்ணில் ஏவியது.

ஏப்.22: சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி., - சி55 ராக்கெட்டை 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தியது.

ஏப்.29: விண்வெளியில் நடந்த முதல் அரேபியரானார் ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) சுல்தான் அல் - நேயாடி.

மே29: ஜி.எஸ்.எல்.வி., - எப்12 ராக்கெட்டில் 'என்.வி.எஸ். - 01' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜூலை30: 'இஸ்ரோ'வின் 'பி.எஸ்.எல்.வி., சி - 56' ராக்கெட்டில் சிங்கப்பூரின் ஏழு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டன.

ஆக.13: ஒரே நேரத்தில் சீனா, பாக்., எல்லையை கண்காணிக்கும் திறன் உடைய 36 மணி நேரம் பறக்கும் 'ஹீரோன் மார்க் - 2' வகை 'ட்ரோன்'கள் விமானப்படையில் இணைப்பு.

ஆக.19: எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காத, ஐ.என்.எஸ்., விந்தியகிரி போர்க்கப்பல் அறிமுகம்.

* பெங்களூருவில் '3 டி' பிரின்டிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் திறப்பு.

ஆக.29: உலகில் முதன்முறையாக 100% எத்தனாலில் இயங்கும் கார் டில்லியில் அறிமுகம்.

செப்.6: நிலவில் ஆய்வு செய்யும் விதமாக 'ஸ்லிம்' விண்கலத்தை 'எச்-IIஏ' ராக்கெட்டில் ஜப்பான் ஏவியது.

செப்.13: விமானப் படைக்காக (வீரர்கள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பணி) தயாரிக்கப்பட்ட நெதர்லாந்தின் 'ஏர்பஸ் - சி295' போக்குவரத்து விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு.

அக்.21: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தின் சோதனை வெற்றி.

அக்.23: நிலவு 446 கோடி ஆண்டுக்கு முன் (ஏற்கனவே கணித்ததை விட 4 கோடி ஆண்டுக்கு முன்) உருவாகி இருக்கலாம் என ஆய்வில் கண்டறிந்தனர்.

அக்.25: சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அந்நாட்டின் டாங் ஹாங்பூ 48, சென்று சாதனை.

டிச.1: உலக வரலாற்றில் '2023' வெப்பமான ஆண்டாக பதிவாகியது என உலக வானிலை மையம் அறிவிப்பு.

டிச.26: கப்பல்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். இம்பால்' பிரம்மோஸ் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இணைப்பு.

ஊதா... ஊதா மூன்...

ஆக. 30: ஒரு மாதத்தில் இரண்டு முறை சூப்பர் மூன் வந்தால் இரண்டாவதை 'ஊதா மூன்' என அழைக்கிறோம். இது ஊதா நிறத்தில் இருப்பதில்லை. அன்று வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் நிலவு காட்சியளிக்கும்.

சோலார் நகர்

செப். 6: இந்தியாவின் முதல் 'சோலார்' நகர் மத்திய பிரதேசத்தின் சாஞ்சி. இங்கு எல்லா வீடுகளுக்கும் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.

பசுமை பஸ்

செப். 25: இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பஸ் டில்லியில் அறிமுகம். 350 கி.மீ., துாரத்திற்கு 30 கிலோ சிலிண்டர் போதும்.

நிலவில் இந்தியா

ஜூலை 14: எல்.வி.எம்., 3 ராக்கெட்டில் நிலவுக்கு 'சந்திரயான் - 3' விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இதிலிருந்து ஆக. 23 அன்று பிரிந்த லேண்டரை நிலவின் தென்

துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

ஆக. 26: லேண்டர் நிலவில் தடம் பதித்த பகுதி 'சிவசக்தி' எனவும், ஏற்கனவே அனுப்பிய 'சந்திரயான் - 2' விண்கலத்தின் லேண்டர் விழுந்த இடத்தை 'திரங்கா' எனவும் பிரதமர் மோடி பெயரிட்டார்.

* தேசிய விண்வெளி தினம் ஆக. 23 என மத்திய அரசு அறிவிப்பு.

ஆஹா... ஆதித்யா...

செப். 2: முதன்முறையாக சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல் 1' விண்கலத்தை பி.எஸ்.எல்.வி., - எக்ஸ்.எல்., ராக்கெட்டில் இஸ்ரோ அனுப்பியது. ஜன.௭, 20௨௪ அன்று பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., துாரத்தில் 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' பகுதியில் நிலைநிறுத்த திட்டம்.

* அக். 29ல் சூரிய அனலில் இருந்து வெளியான எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியது ஆதித்யா.

சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி

ஜூன் 2: கொசு மூலம் பரவும் சிக்குன்குனியா காய்ச்சலுக்கு ஒரு டோஸ் செலுத்தும் 'வி.எல்.ஏ., 1553' என்ற தடுப்பூசியை பிரான்ஸ் கண்டுபிடித்தது.

சறுக்கிய ரஷ்யா

1959 செப். 12ல் நிலவில் முதன்முதலில் விண்கலத்தை (லுனா) தரையிறக்கி சாதித்தது ரஷ்யா(சோவியத் யூனியன்). 64 ஆண்டுக்கு பின் ஆக. 11ல் நிலவின் தென் துருவத்துக்கு 'லுனா - 25' விண்கலத்தை அனுப்பியது. ஆக. 20ல் தொழில்நுட்ப பிரச்னையால் நிலவின் தரையில் மோதியது.






      Dinamalar
      Follow us