/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2023 நவம்பர்- டிசம்பரில் நடந்த நிகழ்வுகள்
/
2023 நவம்பர்- டிசம்பரில் நடந்த நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2024

தமிழகம்
நவ.18: கவர்னர் ரவி நிராகரித்த 10 மசோதா, மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அவருக்கு அனுப்பி வைப்பு.
நவ.20: நில அளவைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்.
நவ.21: ஜெயலலிதா இசை, கவின் கலை பல்கலை.,யின் மதிப்புறு டாக்டர் பட்டம் பாடகி சுசிலாவுக்கு வழங்கப்பட்டது.
டிச.1: திண்டுக்கல் டாக்டரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மாநில லஞ்ச தடுப்பு போலீசாரால் கைது.
டிச.14: தே.மு.தி.க., பொதுச்செயலராக பிரேமலதா பதவியேற்பு.
டிச.17: 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு
ரூ. 6 ஆயிரம் நிவாரணம்.
டிச.21: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை. இவர் வகித்த உயர்கல்வித் துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு.
டிச.30: சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு.
இந்தியா
நவ.1: ஐ.நா.,வின் யுனெஸ்கோ பட்டியலில் இலக்கிய நகராக கேரளாவின் கோழிக்கோடு, இசை நகராக ம.பி.யின் குவாலியர் சேர்ப்பு.
நவ.6: தலைமை தகவல் ஆணையராக ஹீரலால் சமரியா பதவியேற்பு.
நவ.9: நாகலாந்தில் பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்.
நவ.12: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக பி.எஸ்.பிரசாந்த் பதவியேற்பு.
நவ.15: காஷ்மீரின் தோடா பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. 36 பேர் பலி.
நவ.16: நடிகை விஜயசாந்தி பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.
நவ.21: இளம் வயதினர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என
ஐ.சி.எம்.ஆர்., அறிக்கை.
நவ.22: கனடா நாட்டவருக்கு இந்தியாவின் 'இ-விசா' சேவை மீண்டும் துவக்கம்.
நவ.25: உள்நாட்டில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் (வேகம் மணிக்கு 1975 கி.மீ.,) பறந்த
முதல் பிரதமரானார் மோடி.
டிச.5: சியாச்சின் பனி மலையில் பணியமர்த்தப்பட்ட ராணுவ முதல் பெண் மருத்துவ அதிகாரியானார் கேப்டன் கீதிகா கவுல்.
டிச.8: மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் லல்துஹோமா பதவியேற்பு.
*பார்லிமென்டில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற புகாரில் மஹூலா மொய்த்ராவின் (திரிணாமுல்) எம்.பி., பதவி பறிப்பு.
டிச.11: ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு.
டிச.18: வாரணாசியில் உலகின் பெரிய தியான மையத்தை பிரதமர் மோடி திறப்பு.
டிச.19: பார்லி., அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி
எம்.பி.,க்கள் 143 பேர் சஸ்பெண்ட்.
டிச.30: அயோத்தியில் விமான நிலையம் திறப்பு (உ.பி.,).
உலகம்
நவ.2: அமெரிக்க கடற் படையின் முதல் பெண் தளபதியாக லிசா பிரான்செட்டி பதவியேற்பு.
நவ.3: நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் நிலநடுக்கம். 157 பேர் பலி.
நவ.11: ஐஸ்லாந்தில் 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வு பதிவானது.
நவ.17: மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்பு.
*லக்சம்பெர்க் பிரதமராக லுக்பிரைடன் பதவியேற்பு.
*ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்ஷெஸ் பதவியேற்பு.
நவ.27: நியூசிலாந்து பிரதமராக கிறிஸ்டோபர் லுக்சான் பதவியேற்பு.
டிச.1: இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை என மலேசியா அறிவிப்பு.
டிச.10: அர்ஜென்டினா அதிபராக சேவியர் மிலேய் பதவியேற்பு.
டிச.13: போலந்து பிரதமராக டொனல்டு டஸ்க் பதவியேற்பு.
டிச.16: குவைத் மன்னராக மிஷால் அல் அகமது பதவியேற்பு.
டிச.23: பாக்., பார்லி., தேர்தலில் ஹிந்து பெண் (சவீரா பிரகாஷ்) முதன்முறையாக போட்டி.
டிச. 24: இஸ்ரேல் - ஹமாஸ் போரில், கசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.
பார்லி.,யில் அதிர்ச்சி
டிச. 13: பார்லிமென்ட்டில் பாதுகாப்பை மீறி வண்ணப்புகையை பரவ செய்த 6 இளைஞர்கள் கைது.
வந்தார் ரேவந்த்
நவ. 28: தெலுங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி (காங்.,) பதவியேற்பு.
பா.ஜ., ராஜ்யம்
டிச. 13: மூன்று மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. முதல்வர்களாக மோகன் யாதவ் (ம.பி.,), விஷ்ணு தியோ சாய் (சத்தீஸ்கர்), பஜன் லால் சர்மா (ராஜஸ்தான்) பதவியேற்பு.
எட்டாவது அதிசயம்
நவ. 28: கம்போடியாவில் உள்ள 'அங்கோர் வாட்' தொல்பொருள் பகுதி, உலகின் எட்டாவது அதிசயமாக சேர்ப்பு. பரப்பளவு 400 சதுர கி.மீ.
விடைபெற்றார் விஜயகாந்த்...
டிச. 28: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் 71, காலமானார். கட்சி தலைமை அலுவலகத்தில் ௭௨ குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்.
டாப் 5
நவ.11: உபி.,யின் அயோத்தி சரயு நதிக்கரையில் 22.23 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை.
நவ.7: அ.தி.மு.க., கொடி, பெயரை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
நவ.13: பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவியேற்பு.
நவ.24: '3டி' பிரின்ட் முறையில் கட்டப்பட்ட உலகின் முதல் கோயில் (சித்தேஸ்வரா சுவாமி) தெலுங்கானாவில் திறப்பு.
நவ.8: உலகின் முதல் முழு கண் மாற்று ஆப்பரேஷன் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்தது.