sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

/

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

2023 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

செப்.24: தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி - சென்னைக்கு இயக்கம்.

அக்.2: தமிழகத்தின் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் உட்பட 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா

ரூ. 25 லட்சம் பரிசு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அக்.9: திருச்செந்துார் உடன்குடி கருப்பட்டிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு.

அக்.10: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கம்.

அக்.15: சென்னை அண்ணா பல்கலையில் அப்துல் கலாம் சிலை திறப்பு.

அக்.17: சிவகாசி ரெங்க பாளையத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்து. 13 பேர் பலி.

அக்.22: கணைய புற்று நோயை முன்கூட்டியே கண்டறிய சிறப்பு ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐ.ஐ.டி., நிறுவியது.

அக்.23: பா.ஜ., வில் இருந்து நடிகை கவுதமி விலகல்.

அக்.26: சென்னை கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது.

இந்தியா

செப்.1: எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணிக்கு 14 ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.

செப்.2: ஒரே நாடு; ஒரே தேர்தல் ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு.

செப்.17: கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வசித்த கோல்கட்டா சாந்தி நிகேதன் ஆசிரமம்

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் இடம் பெற்றது.

செப்.19: பழைய பார்லி மென்ட்டுக்கு 'அரசியலமைப்பு மாளிகை' என பெயர் வைக்கப்பட்டது.

செப்.21: லோக்சபா, சட்ட

சபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பார்லி மென்டில் நிறைவேற்றம்.

*ம.பி.,யின் ஓம் காரேஸ்வரரில் நர்மதை நதிக்கரையில் 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு.

செப்.22: தே.ஜ., கூட்டணியில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.

செப்.29: தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடகாவில் 'பந்த்'.

அக்.3: ஜார்க்கண்டில் லித்தியம் தனிமம் கண்டுபிடிப்பு.

அக்.12: அகலப்படுத்தப்பட்ட மூணாறு - போடி மெட்டு தேசிய நெடுஞ்சாலை திறப்பு.

அக்.13: உலகின் உயரமான சியாச்சின் (15,500 அடி) பனிமலையில் அலைபேசி டவரை நிறுவியது

இந்திய ராணுவம்.

அக்.14: நாகாலாந்தில் முதல் மருத்துவக்கல்லுாரி திறப்பு.

அக்.15: நவராத்திரிக்காக பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடலின் 'வீடியோ ஆல்பம்' வெளியீடு.

அக்.17: ஒரே பாலின திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு.

அக்.20: முதல் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து டில்லி-காசியாபாத் இடையே (180 கி.மீ.,) துவக்கம்.

அக்.21: ஒடிசா கவர்னராக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் பதவியேற்பு.

அக்.23: தெருநாய் துரத்தியதில் தலையில் காயம் அடைந்த 'வாக் பக்ரி' தேயிலை குழும இயக்குனர் பராக் தேசாய் உயிரிழப்பு.

அக்.28: இந்தியாவின் முதல் திரவ நானோ டி.ஏ.பி., (டி- அம்மோனியம் பாஸ்பேட்) உரம் குஜராத்தின் காந்திநகரில் அறிமுகம்.

அக்.29: ஆந்திராவின் விஜய நகரத்தில் சிக்னலுக்கு நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. 14 பேர் பலி.

உலகம்

செப்.9: மொராக்கோவில் நிலநடுக்கம். 2100 பேர் பலி.

அக்.7: ஆப்கனின் ஹெராத்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 2000 பேர் பலி.

அக்.8: 'ஆப்பரேஷன் அஜய்' திட்டத்தின்படி இஸ்ரேல் போரில் சிக்கிய இந்தியர்கள் மீட்பு.

அக்.14: வெளிநாடுகளில் உயரமான அம்பேத்கர் சிலை (19 அடி) அமெரிக்காவில் திறப்பு.

அக்.16: இந்தியாவுக்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக அரிந்தம் பாக்சி பதவியேற்பு.

அக்.19: இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு.

அக்.22: இங்கிலாந்தின் 'பெல்லா' பூனை அதிக சத்தத்துடன் (54.6 டெசிபல்) உறுமி கின்னஸ் சாதனை.

அக்.23: இந்திய பயணி களுக்கு 'விசா' தேவையில்லை என இலங்கை அறிவிப்பு.

அக்.28: இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஐ.நா., தீர்மானத்துக்கு 120 நாடு ஆதரவு. 14 நாடு எதிர்ப்பு. இந்தியா வெளிநடப்பு.

இந்தியா தலைமை

செப். 9: டில்லி பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடந்தது. உள்படம்: நுழைவுவாயிலில் 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடையுடன் உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டது.

ஆயிரம் அருமை

செப். 15: பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் துவக்கம்.

சிங்கப்பூர் 'ரத்னம்'

செப். 14: சிங்கப்பூர் அதிபராக இலங்கை தமிழர் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு.

கண்ணாடி பாலம்

செப். 6: கேரளாவின் வாகமண்ணில் கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரத்தில் நீளமான கண்ணாடி நடைபாலம் (120 அடி) திறப்பு.

பசுமை பாதை

அக். 2: சோலார் கூரையுடன் 21 கி.மீ., துார 'இந்தியாவின் முதல் சைக்கிள் பாதை' ஐதராபாத்தில் திறப்பு.

டாப் 5

அக்.7: இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் துவக்கம்.

செப். 10: திறன் மேம்பாட்டு வாரியத்தில் ரூ.371 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை.

செப். 18: ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய டில்லி பார்லிமென்ட்டுக்கு எம்.பி.,க்கள் விடை கொடுத்தனர். புதிய கட்டடத்துக்கு இடம் மாறினர்.

செப். 25: பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது.

அக். 2: இந்தியாவில் முதன்முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு விபரம் பீஹாரில் வெளியீடு.






      Dinamalar
      Follow us