/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2023 ஜூலை -- ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்
/
2023 ஜூலை -- ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2024

தமிழகம்
ஜூலை1: தமிழக தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா, டி.ஜி.பி.,யாக சங்கர் ஜிவால் பதவியேற்பு.
ஜூலை7: கோவை டி.ஐ.ஜி., விஜயகுமார் 46, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
ஜூலை15: மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் திறப்பு.
ஜூலை17: சட்டவிரோத பண பரிமாற்றம், அன்னிய செலாவணி மோசடி புகாரில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை 'ரெய்டு'.
*மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி 'டிஸ்சார்ஜ்'. புழல் சிறையில் அடைப்பு.
ஜூலை26: 'தி.மு.க., பைல்ஸ்-2' ஊழல் புகார் ஆவணங்களை கவர்னர் ரவியிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
ஆக.4: வேட்புமனுவில் சொத்து விபரத்தை மறைத்த தேனி அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.
ஆக.25: காலை உணவுத்திட்டம் அனைத்து அரசு பள்ளிக்கும் விரிவாக்கம்.
ஆக.28: மீன்பிடி தடைக் கால நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயர்வு.
இந்தியா
ஜூலை1: மஹாராஷ்டிரா புல்தானாவில் மின்கம்பம் மீது பஸ் மோதி தீ. 26 பேர் பலி.
ஜூலை9: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவில் வன்முறை. 15 பேர் பலி.
ஜூலை11: இந்தியாவில் 15 ஆண்டில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாக ஐ.நா., அறிவிப்பு.
ஜூலை18: அந்தமான் போர்ட்பிளேரில் வீர சாவர்க்கர் விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு.
ஜூலை24: டில்லியில் ஏழைகளுக்கு 'குடிநீர் ஏ.டி.எம்.,' அறிமுகம்.
ஆக.3: டில்லி துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கும் நிர்வாக மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம்.
ஆக.9: கேரளாவை 'கேரளம்' என மாற்றக்கோரி அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஆக.10: மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. பதிலுரையில் 2 மணி, 13 நிமிடம் பேசி பிரதமர் மோடி சாதனை.
ஆக.21: இந்தியாவின் வயதான வளர்ப்பு யானை பிஜுலி பிரசாத் 89, அசாமில் உயிரிழந்தது.
ஆக.22: தேர்தல் ஆணைய துாதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் நியமனம்.
ஆக.23: மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 26 தொழிலாளர் பலி.
ஆக.27: 'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தின் கீழ் சிறந்த நகரமாக இந்துார், மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வு.
ஆக.30: கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் துவக்கம்.
ஆக.31: ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா பதவியேற்பு.
உலகம்
ஜூலை5: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 9வது நாடாக ஈரான் சேர்ந்தது.
ஜூலை6: 'டுவிட்டருக்கு' போட்டியாக 'திரெட்ஸ்' செயலியை வெளியிட்டது 'மெட்டா' நிறுவனம்.
ஜூலை8 : தான்சானியாவில் விவேகானந்தரின் சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
*லாட்வியா அதிபராக எட்கார்ஸ் ரின்கேவிக்ஸ் பதவியேற்பு.
ஜூலை24: சமூக வலை தளமான டுவிட்டரின் பெயர் 'எக்ஸ்' என மாற்றம்.
ஜூலை30: பாகிஸ்தான் கைபர் மாகாணத்தில் ஜே.யு.ஐ.என்., கட்சி பொதுக் கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல். 63 பேர் பலி.
ஆக.22: தென் ஆப்ரிக்காவில் நடந்த 15வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
*கம்போடியா பிரதமராக ஹூன் மானெட் பதவியேற்பு.
ஆக.23: தாய்லாந்து பிரதமராக ஸ்ரீரிதா தாவிசின் பதவியேற்பு.
ஆக.27: ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் மங்காக்வா மீண்டும் பதவியேற்பு.
ஆக.31: தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ. 73 பேர் பலி.
கனவு கூட்டணி
ஜூலை 18: பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் காங்., உட்பட 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இண்டியா' என பெயரிடப்பட்டது.
எழுச்சி மாநாடு
ஆக.20: மதுரையில் அ.தி.மு.க., மாநாடு நடந்தது.
யாத்திரை முத்திரை
ஜூலை 28: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் துவக்கினார்.
பவார் 'பவர்'
ஜூலை 2: மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்., உடைந்தது. இக்கட்சியில் இருந்து விலகிய அஜித் பவார் துணை முதல்வரானார்.
புரட்சி வீழ்ச்சி
ஆக. 23: ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட 'வாக்னர்' தனியார் ராணுவ படை தலைவர் பிரிகோஜின் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலி.
டாப் 5
ஜூலை 1: ஆஸ்திரியாவின் 320 ஆண்டு பழமையான 'வியனர் ஜெய்டங்' நாளிதழ் நிறுத்தம்.
ஜூலை 16: சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுபவருக்கு ரூ.10,000 வெகுமதி. தமிழக அரசு அறிவிப்பு.
ஜூலை 21: அமெரிக்க கப்பல்படையின் முதல் பெண் தளபதியாக லிசா பிரான்செட்டி பதவியேற்பு.
ஆக. 5: அவதுாறு வழக்கில் ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மீண்டும் எம்.பி., ஆனார்.
ஜூலை18: உலகின் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம். இந்தியாவுக்கு 80வது இடம்.