sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 மே - ஜூனில் நடந்த நிகழ்வுகள்

/

2023 மே - ஜூனில் நடந்த நிகழ்வுகள்

2023 மே - ஜூனில் நடந்த நிகழ்வுகள்

2023 மே - ஜூனில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மே1: தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை சட்ட மசோதா வாபஸ்.

மே11: தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு.

*தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம். தங்கம் தென்னரசு - நிதி, தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம், மனோ தங்கராஜ் - பால்வளத்துறை.

மே15: செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி.

மே23: முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றார்.

*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி விருதுநகர் முத்தமிழ்செல்வி சாதனை.

மே27: சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா பதவியேற்பு.

ஜூன்7: இந்தியாவில் முதன் முறையாக கொடைக்கானல் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற 'பயோ பிளாக்' திட்டம் அறிமுகம்.

ஜூன்9: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பா.ஜ., வில் இணைந்தார்.

ஜூன்13: தமிழக தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் பதவியேற்பு.

*'நீட்' தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண் பெற்று தமிழகத்தின் பிரபஞ்சன், ஆந்திராவின் போரா வருண் முதலிடம்.

ஜூன்16: முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை, தங்கம் தென்னரசுக்கு மின் துறை கூடுதல் பொறுப்பு. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பு.

*பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாசிற்கு மூன்றாண்டு சிறை.

இந்தியா

மே3: மணிப்பூரில் இரு பிரிவினர் மோதல். 73 பேர் பலி.

மே7: கேரளாவின் மலப் புரத்தில் உள்ள தானுாரில் சுற்றுலா படகு கவிழ்ந்து 22 பேர் பலி.

மே8: ராஜஸ்தானின் டெகானாவில் லித்தியம் தனிமம் கண்டுபிடிப்பு.

மே11: அதிகாரி நியமனம், இடமாற்றத்தில் டில்லி அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

மே14: கர்நாடகாவில் காங்., 135 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ., 66, ம.ஜ.த., 19ல் வென்றன.

மே16: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.

மே18: மத்திய புவி அறிவியல்

அமைச்சராக கிரண் ரிஜ்ஜூ பதவியேற்பு. அர்ஜூன் ராம் மேஹ்வாலுக்கு சட்டத்துறை மாற்றம்.

*ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

மே19: ரூ.2000 நோட்டு களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

*உ.பி., காசியாபாத் - அலிகர் விரைவு சாலையை 100 மணி நேரத்தில் அமைத்து சாதனை.

மே25 : சி.பி.ஐ., இயக்குன ராக பிரவீன் சூட் பதவியேற்பு.

மே28: மணிப்பூரில் பாது காப்பு படையினரால் 40 பயங்கர

வாதிகள் சுட்டுக்கொலை.

ஜூன்1: டில்லியில் பிரதமர் மோடி - நேபாள பிரதமர் பிரசண்டா சந்திப்பு.

ஜூன்19: 'ரா' உளவு அமைப்பின் தலைவராக ரவி சின்ஹா பதவியேற்பு.

உலகம்

மே5: 'கொரோனா சுகாதார அவசர நிலை' முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார மையம் அறிவிப்பு.

மே15: எவரெஸ்ட் சிகரத்தில் அதிகமுறை ஏறிய நேபாளத்தின் ரிடா ஷெர்பா (26) சாதனையை சக வீரர் பசங் தவா ஷெர்பா சமன் செய்தார்.

மே20: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 49வது 'ஜி-7' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

மே23: நைஜீரியா அதிபராக போலா தினுபு பதவியேற்பு.

ஜூன்3: உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா பதவியேற்பு.

ஜூன்6: ரஷ்ய கட்டுப் பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சான் மாகாணத்தின் நோவா கவோஹா அணை தகர்ப்பு.

ஜூன்19: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொலை.

ஜூன்20: பின்லாந்து பிரதமராக பெட்டரி ஓர்போ பதவியேற்பு.

ஜூன்21: வாஷிங்டனில் உள்ள ஐ.நா., சபையில் யோகா தினம். பிரதமர் மோடி பங்கேற்பு.

ஜூன்23: அமெரிக்க பார்லி., கூட்டு கூட்டத்தில்

இரண்டாவது முறையாக உரையாற்றிய முதல் பிரதமரானார் மோடி.

ஜூன்25: லஞ்ச வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுவிப்பு.

துரத்தும் சோதனை

ஜூன் 14: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை.

செங்கோல் கவுரவம்

மே 28: டில்லியில் புதிய பார்லிமென்ட் திறக்கப்பட்டது.

உள்படம்: லோக்சபாவில் தமிழக பாரம்பரிய செங்கோல் நிறுவப்பட்டது. இதை பிரதமர் மோடியிடம் வழங்கிய திருவாவடுதுறை ஆதினம்.

டைட்டானிக் சோகம்

ஜூன் 23: அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் புதைந்திருக்கும் 'டைட்டானிக்' கப்பலை பார்வையிட நீர்மூழ்கியில் சென்ற ஐந்து தொழிலதிபர்கள் பலி.

மன்னர் மகுடம்

மே6: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் 74, முடிசூடினார்.

ஓங்கியது 'கை'

மே20: கர்நாடகாவில் காங்., ஆட்சி. முதல்வராக சித்தராமையா (வலது), துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்பு.

டாப் 5

மே 8: பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை.

மே9: ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது.

ஜூன் 8: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலை திருப்பதி தேவஸ்தானம் திறந்தது.

ஜூன் 28: இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் ஹரியானாவில் துவக்கம்.

மே 30: துருக்கி அதிபராக எர்டோகன் மீண்டும் பதவியேற்பு.






      Dinamalar
      Follow us