sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

/

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2023 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2024

Google News

PUBLISHED ON : ஜன 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஏப்.1: நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை அரசு 50 சதவீதம் உயர்த்தியது.

ஏப்.6: வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட பீஹாரின் மனீஷ் காஷ்யப் கைது.

ஏப்.10: 'ஆன்லைன் ரம்மி' தடை சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ரவி ஒப்புதல்.

*தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 72, காலமானார்.

ஏப்.14: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்களின் சொத்து பட்டியலை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

ஏப்.16: உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பின் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

ஏப்.25: மணல் கடத்தல் புகார் அளித்த துாத்துக்குடி முறப்பநாடு வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை.

*குட்கா விற்பனைக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியா

ஏப்.1: கொலை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற பஞ்சாப் முன்னாள் காங்., தலைவர் சித்து விடுதலை.

ஏப்.3: கேரளாவில் ஆலப்புழா - கண்ணுார் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ. 3 பேர் பலி. ஷாரூக் சைபி கைது.

ஏப்.6: உலகில் 'பிசி'யான விமான நிலையங்களில் அமெரிக்காவின் அட்லான்டா முதலிடம். டில்லிக்கு 9வது இடம்.

ஏப்.7: பா.ஜ.,வில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி இணைந்தார்.

ஏப்.9: 'புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி உள்ளிட்டவைகளை பாதுகாக்க 'சர்வதேச பெரிய பூனை கூட்டணி' திட்டம் துவக்கம்.

ஏப்.10: ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம். மம்தாவின் திரிணாமுல் காங்., சரத்பவாரின் தேசியவாத காங்., இழந்தன.

ஏப்.12: பஞ்சாப் பதிண்டா முகாமில் சக ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தின் இருவர் உட்பட 4 பேர் பலி.

ஏப்.14: இந்தியாவின் முதல் '3டி' தபால் நிலையம் பெங்களூருவில் திறப்பு.

*வடகிழக்கு மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் கல்லுாரி அசாமில் துவக்கம்.

ஏப்.15: கோல்கட்டாவில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை சோதனை.

*மஹாராஷ்டிராவின் ராய்காட் மலையில் பஸ் கவிழ்ந்தது. 28 பேர் பலி.

*ஆயுதப் படை பணிக்கான போட்டித்தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என மத்திய

அரசு அறிவிப்பு.

*உபி.,யில் முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது, அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொலை.

ஏப்.17: பா.ஜ.,வில் இருந்து விலகிய கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரசில் இணைந்தார்.

ஏப்.19: நாகாலாந்தில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லுாரி துவக்கம்.

ஏப்.20: கேரளாவில் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு விளையாட்டு மைதான திட்டம் துவக்கம்.

ஏப்.23: பஞ்சாபில் காலிஸ் தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.

ஏப்.25: தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியனில் முதல் மருத்துவக்கல்லுாரி திறப்பு.

உலகம்

ஏப்.2: திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் எம்.எப். ஹைட்ரா படகு நார்வேயில் அறிமுகம். 300 பேர் பயணிக்கலாம்.

ஏப்.3: 'நேட்டோ' ராணுவ கூட்டமைப்பில் 31வது நாடாக இணைந்தது பின்லாந்து.

ஏப்.12: மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய மக்கள் மீது வான் வழி தாக்குதல். 113 பேர் பலி.

ஏப்.15: ஜெர்மனியில் 1960ல் இருந்து பயன்படுத்திய அணு உலை மின்சாரம் முடிவுக்கு வந்தது.

ஏப்.17: உலகில் போதைப் பொருள் விற்பனையில் அதிக அன்னிய செலாவணி (ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கோடி) ஈட்டும் நாடானது சிரியா.

ஏப்.19: ஐ.நா., புள்ளி விபரப்படி உலக மக்கள் தொகையில் சீனாவை (142.57 கோடி) முந்தி இந்தியா (142.86 கோடி) முதலிடம்.

ஏப்.24: வங்கதேச அதிபராக சஹாபுதீன் பதவியேற்பு.

*உள்நாட்டு போர் பாதித்த சிரியாவில் இருந்து 'ஆப்பரேஷன் காவிரி' திட்டத்தில் 3800 இந்தியர்கள் மீட்பு.

ஏப்.29: உலகில் அகதிகள் எண்ணிக்கை 18.40 கோடி என உலக வங்கி அறிவிப்பு.

உயரே...உயரே

ஏப்.8: 'சுகோய் - 30' போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.

முத்தான மூன்று

ஏப்.8: தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம், சென்னை - கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில், மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம்(7.2 கி.மீ.,) மேம்பாலத்தை துவக்கினார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்

ஏப்.26: குஜராத்தின் சோம்நாத்தில் 10 நாள் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடந்தது. நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை.

இந்திய அழகி

ஏப். 15: ராஜஸ்தானின் நந்தினி குப்தாவுக்கு 'மிஸ் இந்தியா' பட்டம்.

புதுமை பயணம்

ஏப்.23: கேரளாவின் கொச்சியில் 'வாட்டர் மெட்ரோ' படகு சேவை துவக்கம்.

டாப் 5

ஏப்.30: பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' 100வது உரை ஒலிபரப்பானது.

ஏப்.26: பிலிப்பைன்சின் 'ராமன் மகசேசே' விருதை திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா பெற்றார்.

ஏப்.9: இந்தியாவில் புலி எண்ணிக்கை 3167 ஆக உயர்வு.

ஏப்.25: 'ஆப்பரேஷன் காவேரி' திட்டத்தின் கீழ் சூடானில் இருந்து (ஏப்.25 - மே 5) 3862 இந்தியர்கள் மீட்பு.

ஏப்.26: சத்தீஸ்கரின் தந்தேவாடாவில் நக்சலைட் வெடிகுண்டு தாக்குதல். 11 போலீசார் வீரமரணம்.






      Dinamalar
      Follow us