PUBLISHED ON : ஜன 01, 2024

தமிழகம்
மார்ச்1: மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்பு பணி நிறைவு.
மார்ச்2: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இளங்கோவன் (காங்.,) வெற்றி.
மார்ச்20: பெண்களை ஆபாச படம் எடுத்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் கைது.
மார்ச்22: காஞ்சிபுரத்தில் உள்ள வளத்தோட்டத்தில் பட்டாசு கோடவுனில் விபத்து. 9 பேர் பலி.
*விருதுநகர் குமாரலிங்க புரத்தில் 'பி.எம். மித்ரா' ஜவுளி மண்டலம், ஆடைப் பூங்காவுக்கு அடிக்கல்.
*தமிழக கூட்டுறவு வங்கிகளில் உடனடி பணம் அனுப்பும் ஐ.எம்.பி.எஸ்., வசதி அறிமுகம்.
மார்ச்28: ௩௦ வினாடிகளில் பாலில் கலப்படம் கண்டறிய காகித கையடக்க 3டி கருவியை சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியது.
இந்தியா
மார்ச்1: இந்தியாவில் முதன்முறையாக கேரளாவின் திரிச்சூர் கிருஷ்ணன் கோயிலில் மதச்சடங்குகளுக்கு ரோபோ யானை அறிமுகம்.
மார்ச்3: மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ஜிஷ்னு பரூவா (அசாம்) பதவியேற்பு.
*ஆசியாவின் நீளமான சைக்கிள் பந்தயம் (கன்னியாகுமரி - காஷ்மீர், 3000 கி.மீ. ) துவக்கம்.
மார்ச்5: ம.பி.,யில் ஏழை பெண்களுக்கு ரூ.1000 திட்டம் துவக்கம்.
மார்ச்7: மேகாலயா முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் கன்ராட் சங்மா பதவியேற்பு.
*நாகாலாந்து முதல்வராக என்.டி.பி.பி., தலைவர் நெய்பியு ரியோ ஐந்தாவது முறையாக பதவியேற்பு.
மார்ச்8: திரிபுரா முதல்வராக பா.ஜ.,வின் மாணிக் சாஹா பதவியேற்பு.
மார்ச்9: டில்லியில் புதிய அமைச்சர்களாக ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ், அதிஷி மர்லினா பதவியேற்பு.
மார்ச்10: டில்லியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் சந்திப்பு.
மார்ச்13: புதுச்சேரி பட்ஜெட்டில் சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம் அறிவிப்பு.
மார்ச்17: உ.பி., சம்பல் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு குளிர்பதன கிடங்கின் கூரை விழுந்து 10 பேர் பலி.
மார்ச்18: இந்தியா - வங்கதேசம் இடையே குழாய் வழி டீசல் வினியோக திட்டம் துவக்கம்.
மார்ச்24: அவதுாறு வழக்கில் காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை. எம்.பி., பதவியில் இருந்து நீக்கம்.
மார்ச்30: ம.பி.,யின் இந்துாரில் பேலேஷ்வர் மஹா தேவ் கோயிலில் படிக்கட்டு கிணற்றின் மூடி சரிவு. 35 பேர் பலி.
உலகம்
மார்ச்1: கிரீசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல். 42 பேர் பலி.
மார்ச்3: வியட்நாம் அதிபராக வோ வான் தியோங் பதவியேற்பு.
மார்ச்7: கத்தார் பிரதமராக முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி பதவியேற்பு.
மார்ச்11: சீனாவின் எட்டாவது பிரதமராக லி கியாங் பதவியேற்பு.
மார்ச்13: நேபாள அதிபராக ராமச்சந்திர பவுதெல் பதவியேற்பு.
மார்ச்16: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக லாஸ் ஏஞ்சல்ஸ் முன்னாள் மேயர் எரிக் கார்ஸெட்டி 52, நியமனம்.
*அமெரிக்க விமான படை உதவி செயலராக இந்திய வம்சாவளி ரவி சவுத்ரி நியமனம்.
*இந்தியா - சீனா இடையிலான 'மெக்மோகன்' எல்லைக்கோட்டை அங்கீகரித்தது அமெரிக்கா.
மார்ச்20: உலகின் மகிழ்ச்சி யான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம். இந்தியாவுக்கு 125வது இடம்.
*வங்கதேசத்தின் முதல் நீர்மூழ்கி கப்பல் தளம் திறப்பு.
மார்ச்27: ஸ்காட்லாந்து பிரதமராக ஹம்சா பதவியேற்பு.
மார்ச்28: மெக்சிகோவில் அகதிகளுக்கான குடியேற்ற மையத்தில் தீ. 39 பேர் பலி.
மார்ச்30: அஜர்பைஜான், தஜிகிஸ்தானை மலேரியா இல்லாத நாடாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.
*பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ. 32 பேர் பலி.
ஒளிரும் கீழடி
மார்ச்5: மின்னொளியில் சிவகங்கையின் கீழடியில் திறக்கப்பட்ட தொல்லியல் அருங்காட்சியகம்.
'சூப்பர்' சுரேகா
மார்ச்14: 'வந்தே பாரத்' (மும்பை) ரயிலை இயக்கிய முதல் பெண் டிரைவர் ஆனார் சுரேகா யாதவ்.
மெகா பிளாட்பாரம்
மார்ச்12: கர்நாடகாவின் ஹூப்ளி ஸ்ரீ சித்தாருடா சுவாமிகள் ரயில் நிலையத்தில் உலகின் நீளமான (4944 அடி) பிளாட்பாரம் திறப்பு.
நினைத்தது நடந்தது
மார்ச்28: அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி பதவியேற்பு.
விசால சாலை
மார்ச்12: பெங்களூரு - மைசூரு இடையே 118 கி.மீ., துார 10 வழிச்சாலை துவக்கம்.
டாப் 5
மார்ச்22: உத்தரகண்டின் தேவஸ்தாலில், ஆசியாவின் பெரிய திரவ கண்ணாடி தொலைநோக்கி (13 அடி விட்டம்) திறப்பு.
மார்ச்4: மஹாராஷ்டிரா வாணி---வரோரா நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் தடுப்புச் சுவர் (200 மீட்டர் நீளம்) அமைக்கப்பட்டது.
மார்ச்10: சீன அதிபராக ஷீ ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்பு.
மார்ச்19: போருக்குப்பின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புடின் சென்றார்.
மார்ச்20: டில்லியில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்திப்பு.