PUBLISHED ON : ஜன 01, 2024

தமிழகம்
பிப்.8: கல்லுாரி மாணவி களுக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை தமிழக அரசு திட்டம் துவக்கம்.
பிப்.9: ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 17.740 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் மீட்பு.
பிப்.13: நான்கு ஏ.டி.எம்.,இயந்திரங்களை உடைத்து திருவண்ணாமலையில் ரூ. 75 லட்சம் கொள்ளை.
பிப்.14: சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், வ.உ.சி., இழுத்த செக்கு பார்வைக்கு வைக்கப்பட்டது.
பிப்.20: தமிழக அரசு மானியத்தில் ராமேஸ்வரம் - காசிக்கு முதியோர் செல்லும் திட்டம் துவக்கம்.
இந்தியா
பிப்.6: ஆசியாவின் பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலை (ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்) கர்நாடகாவின் தும்கூருவில் திறப்பு.
பிப்.8: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு துவக்கம்.
பிப்.9: உலக பால் உற்பத்தியில் (24 சதவீதம்) இந்தியா முதலிடம் என மத்திய அரசு தகவல்.
*ஆந்திரா காக்கிநாடாவில் எண்ணெய் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி.
பிப்.10: இந்தியாவில் முதன் முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்திய படிமம் கண்டுபிடிப்பு.
பிப்.12: டில்லி - ராஜஸ்தானின் தவுசா லால்சாட் இடையே 246 கி.மீ., எட்டு வழி எக்ஸ்பிரஸ் சாலை திறக்கப்பட்டது.
பிப்.13: இந்தியாவின் முதல் ஏ.ஐ., தொழில்நுட்பம் (லெக்சி) அறிமுகம்.
பிப்.14: பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் டில்லி, மும்பை அலுவலகத்தில் வருமான வரி சோதனை.
பிப்.15: இந்தியாவின் முதல் 'ஏசி' இரண்டு மாடி மின்சார பஸ் மும்பையில் அறிமுகம்.
பிப்.16: லடாக் துணைநிலை கவர்னராக பி.டி.மிஸ்ரா பதவியேற்பு.
பிப்.17: சிவசேனா கட்சி, சின்னத்தை பயன்படுத்த மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி.
பிப்.18: ம.பி.,யின் குனோ தேசிய பூங்காவில் தென் ஆப்ரிக்காவின் 12 சிவிங்கி புலிகள் விடப்பட்டன.
பிப்.22: ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை ௫ல் இருந்து 6 ஆக உயர்த்த
மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.
* டில்லி மேயராக ஷெல்லி ஓபராய் பதவியேற்பு.
பிப்.24: ஆந்திர கவர்னராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் பதவியேற்பு.
* இந்தியாவின் 'சிந்துகேஷரி' நீர்மூழ்கி கப்பல் முதன் முறையாக இந்தோனேஷிய கடல்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தம்.
பிப்.25: டில்லியில் பிரதமர் மோடி - ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல் சந்திப்பு.
பிப்.28: டில்லியில் பிரதமர் மோடி - தமிழக அமைச்சர் உதயநிதி சந்திப்பு.
* தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு பதவியேற்பு.
* ஊழல் வழக்கில் கைதான டில்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா.
உலகம்
பிப்.2 : கினி நாட்டின் முதல் பெண் பிரதமராக மனுாலா ரோகா பதவியேற்பு.
பிப்.9: அமெரிக்க ராணுவம் சீனாவின் ராட்சத உளவு பலுானை சுட்டு வீழ்த்தியது.
பிப்.13: ஐ.நா.,வின் அமைதி விருதுக்கு ஜெர்மனி முன்னாள் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தேர்வு.
பிப்.15: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி. ஒரு லிட்டர் பால் ரூ. 210 ஆக உயர்வு.
பிப்.16: 'யு டியூப்' தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் பதவியேற்பு.
பிப்.21: இந்தியா - சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை துவக்கம்.
பிப்.23: சவுதியில் நடந்த பஸ் விபத்தில் கர்நாடகாவின் 6 ஹஜ் யாத்ரீகர்கள் பலி.
* ரஷ்யா - உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு.
பிப்.26: கலிபோர்னியாவில் உள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் 100 ரோபோக்கள் பணிநீக்கம்.
பிப்.27: இத்தாலியில் அகதிகள் படகு கவிழ்ந்தது. 62 பேர் பலி.
பிப்.28: சைப்ரஸ் அதிபராக நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் பதவியேற்பு.
மாணவர் 'ராக்கெட்'
பிப்.19: மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோளுடன் கூடிய 'ஹைபிரிட்' ராக்கெட், மாமல்லபுரத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
லட்ச தீபம்
பிப்.19: ம.பி.,யின் உஜ்ஜைனியில் மஹா சிவராத்திரிக்காக 18.82 லட்ச தீபம் ஏற்றம்.
அதிர்ந்தது துருக்கி
பிப்6: துருக்கி, சிரியா நாடுகளில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 45,000 பேர் பலி.
ஆம் ஆத்மிக்கு 'செக்'
பிப்.26: மதுபான விற்பனை கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி துணை முதல்வர்
மணிஷ் சிசோடியா சி.பி.ஐ.,யால் கைது.
உக்ரைனில் பைடன்
பிப்.20: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
டாப் 5
பிப்.18: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம்.
பிப்.23: அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
பிப்.25: ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலுார் முள்ளு கத்திரிக் காய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு.
பிப்.18: ஜார்க்கண்ட் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு.
பிப்.20: நாகாலாந்து கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு