/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2024 ஜனவரி - பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள்
/
2024 ஜனவரி - பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2025

தமிழகம்
ஜன.2: திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் துவக்கம்.
ஜன.4: முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வம் 70, காலமானார்.
ஜன.21: ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்.
ஜன.28: முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் (12 நாள்) பயணம்.
பிப்.2: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் துவக்கினார்.
பிப்.5: மதுரை பூரணம்மாள், தன் மகள் நினைவாக, ஒத்தக்கடை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.10 கோடி மதிப்பு நிலத்தை தானம் செய்தார்.
பிப்.12: உண்மைக்கு புறம்பான தகவல் இருப்பதாக கூறி, உரையை படிக்காமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ரவி.
* சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி, ஹிமாச்சல் சட்லெஜ் நதியில் காருடன் விழுந்த விபத்தில் மரணம்.
பிப்.17: தமிழக காங்., தலைவரானார் செல்வப்பெருந்தகை. *சாத்துார் பட்டாசு தொழிற் சாலையில் விபத்து. 10 பேர் பலி.
பிப்.24: விளவங்கோடு காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி பா.ஜ.,வில் சேர்ந்தார்.
பிப்.25: சென்னை மெரீனா கடற் கரையில் கருணாநிதி நினைவிடம் திறப்பு.
இந்தியா
ஜன.10: மஹாராஷ்டிராவில் ஷிண்டே அணியே சிவசேனா கட்சி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
*கோவாவில் நான்கு வயது மகனை கொன்று உடலை சூட்கேசில் வைத்து காரில் எடுத்து வந்த ஐ.டி., நிறுவன பெண் சி.இ.ஓ., சுச்சனா சேட், பெங்களூருவில் கைது.
ஜன.12: மத்திய அரசின் துாய்மை நகரங்கள் பட்டியலில் ம.பி.,யின் இந்துார், குஜராத்தின் சூரத் முதலிடம்.
ஜன.14: 'ஒற்றுமை நீதி யாத்திரை'யை காங்., எம்.பி., ராகுல் மணிப்பூரில் துவக்கினார்.
ஜன.18: அயோத்தி ராமர் கோயில் நினைவு தபால் தலை வெளியீடு.
ஜன.28: பீஹாரில் ரா.ஜ.த., - காங்., கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார். பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். *உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழா நடந்தது.
ஜன.31: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது.
பிப்.2: ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு. *இந்திய படையில் ஐ.என்.எஸ்., சந்தாயக் ஆய்வுக் கப்பல் சேர்ப்பு.
பிப்.6: மஹாராஷ்டிராவில் அஜித் பவார் அணியே, தேசியவாத காங்., என தேர்தல் கமிஷன் அறிவிப்பு. *தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் தலைமை நீதிபதியின் ஒப்புதல் அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
பிப்.9: போட்டித்தேர்வுகளில் மோசடியை தடுக்கும் மசோதா பார்லி மென்டில் நிறைவேற்றம். அதிபட்சமாக ரூ. 1 கோடி, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிப்.13: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், பா.ஜ., வில் சேர்ந்தார்.
பிப்.20: இந்தியாவின் நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலம் (2.32 கி.மீ.,) குஜராத்தில் திறப்பு.
உலகம்
ஜன.1: இந்தியா, சீனாவுடன் 'பிரிக்ஸ்' அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி, யு.ஏ.இ., இணைந்தன.
ஜன.3: ஈரானில் முன்னாள் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி நினைவு தினத்தில் குண்டு வெடிப்பு. 103 பேர் பலி.
ஜன.3: மார்செல் தீவு பிரதமராக ஹில்டா ஹெய்னி பதவியேற்பு.
ஜன.7: பிரதமர் மோடி லட்சத்தீவில் மேற்கொண்ட பயணத்தை விமர்சித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம். *இலங்கையின் திரிகோண மலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடந்தது.
*இலங்கையின் கடல் பகுதிக்குள் வெளிநாட்டு கப்பல் நுழைய அந்நாடு ஓராண்டு தடை.
ஜன.8: வங்கதேச தேர்தலில் அவாமி லீக் வெற்றி. பிரதமரானார் ஷேக் ஹசீனா.
ஜன.9: பிரான்சின் இளம் பிரதமராக கேப்ரியல் அட்டல் 34, பதவியேற்பு.
ஜன.14: டென்மார்க் மன்னரானார் பத்தாம் பிரட்ரிக் 56.
ஜன.21: தைவான் அதிபராக வில்லியம் லால் பதவியேற்பு.
ஜன.24: உக்ரைன் கைதிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து. 74 பேர் பலி.
பிப்.4: நமீபியா அதிபராக நங்கொலா முபுமா பதவியேற்பு.
பிப்.5: புற்றுநோயால் பிரிட்டன் மன்னர் சார்லஸ் பாதிப்பு.
பிப்.7: உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கப்பல்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை இந்திய அரசின் முயற்சியால் விடுதலை செய்தது கத்தார் நீதிமன்றம்.
பிப்.16: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி 47, சிறையில் மர்ம மரணம்.
கின்னஸ் சாதனை
ஜன.1: குஜராத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை.
தீராத சோகம்
ஜன.1: ஜப்பானின் ஹோன்சு தீவில் 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம். 339 பேர் பலி.
நீளமான பாலம்
ஜன.11: இந்தியாவின் நீளமான பாலம் (செவ்ரி - சிர்லி 21.8 கி.மீ.,) மும்பையில் திறப்பு.
ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு
ஜன.24: மதுரை அலங்காநல்லுார் கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு.
முதல் கோயில்
பிப்.14: அபுதாபியில் 27 ஏக்கர் பரப்பளவில் முதல் ஹிந்து கோயிலை (சுவாமி நாராயண்) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டாப் - 3
பிப்.8: பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகண்ட்.
ஜன.16: மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிய வகை நீல வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு.
பிப். 28: துாத்துக்குடி குலசேகரபட்டினத்தில், நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல்.