/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2024 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்
/
2024 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2025

தமிழகம்
செப்.14: அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார். ரூ. 7516 கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
செப்.16: துாத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை பிரதமர் துவக்கினார்.
செப்.26: பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப்பின் ஜாமின்.
செப்.27: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு.
அக்.1: மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் நிலையமாக அறிவிப்பு.
*வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் 77, காலமானார்.
அக்.12: சென்னை கவரப் பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து. 19 பேர் காயம்.
அக்.13: சென்னை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் பற்றி அவதுாறாக பேசி கைதான (செப். 7) சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஜாமின்.
இந்தியா
செப்.11: 'ஆயுஷ்மான் பாரத்' கீழ் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவக்காப்பீடு வழங்கும் திட்டம் துவக்கம்.
செப்.13: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்.
செப்.19: தேஜஸ் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானியானார் மோகனா சிங்.
செப்.26: உலகின் உயரமான சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி முர்மு ஆய்வு.
அக்.1: இந்தியா விமானப்படை தளபதியாக ஏ.பி.சிங்., பதவியேற்பு.
அக்.4: மராத்தி, வங்காளம், பாலி, பிராக்ரித், அசாமிக்கு செம்மொழி அந்தஸ்து. நாட்டில் செம்மொழி எண்ணிக்கை 11 ஆனது.
*சத்தீஸ்கரின் நாராயண்பூரில் 36 மாவோயிஸ்ட்கள் மத்திய பாதுகாப்பு படையால் சுட்டுக்கொலை.
*எஸ்.சி., / எஸ்.டி., இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அக்.6: டில்லியில் பிரதமர் மோடி - மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு.
அக்.17: ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சிங் சைனி பதவியேற்பு.
அக்.17: பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 25 பேர் பலி.
அக்.18: தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் பதவியேற்பு.
அக்.20: ஆசியாவின் சக்திவாய்ந்த 'டாப் - 100' பெண்கள் பட்டியலில் அப்பல்லோ துணை தலைவர் ப்ரீதா ரெட்டிக்கு 44வது இடம்.
அக்.25: டில்லியில் பிரதமர் மோடி - ஜெர்மனி அதிபர் ஸ்கால்ப் ஓலஜ் சந்திப்பு.
அக்.26: குஜராத்தில் டாடா - ஏர்பஸ் நிறுவன விமான உற்பத்தி ஆலை துவக்கம்.
அக்.30: அயோத்தி, சரயு நதிக் கரையில் 25 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை.
உலகம்
செப்.12: சர்வதேச சோலார் கூட்டமைப்பில் 101வது நாடாக இணைந்தது நேபாளம்.
செப்.14: அந்தமான் நிகோபர் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் 'ஸ்ரீவிஜயபுரம்' என மாற்றம்.
செப்.16: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையின் கிளை டில்லியில் திறப்பு.
செப்.17: லெபனானுக்குள் நுழையாமலே ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் 'பேஜர்' தகவல் தொடர்பு சாதனத்தை வெடிக்க வைத்தது. 12 பேர் பலி. 3000 பேர் காயம்.
செப்.18: 'வாக்கி டாக்கி' வெடிக்க வைத்து 25 பேர் பலி.
செப்.22: தொழுநோயை ஒழித்த முதல் நாடு ஜோர்டான் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு.
அக்.1: மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு.
*ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா பதவியேற்பு.
அக்.2: இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.
அக்.6: துனுசியா அதிபராக கயாஸ் சயீது மீண்டும் பதவியேற்பு.
அக்.13: 50 ஆண்டுகளில் முதன் முறையாக சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் தேங்கியது.
அக்.18: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் பலி.
அக்.20: இந்தோனேஷியா அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு.
அக்.21: வியட்நாம் அதிபராக லுாயங் குயோங் பதவியேற்பு.
அக்.22: 16வது பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு ரஷ்யாவில் நடந்தது.
அக்.28 : சாட் நாட்டில் ராணுவ முகாம் மீது 'போகோ ஹராம்' பயங்கரவாதிகள் தாக்குதல். 40 பேர் பலி.
துணை முதல்வர்
செப்.29: துணை முதல்வராக உதயநிதி, அமைச்சராக செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ராஜேந்திரன், நாசர் பதவியேற்பு. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் நீக்கம்.
மெரினாவில் மக்கள் வெள்ளம்
அக்.6: சென்னை மெரினாவில் நடந்த போர் விமான சாகசத்தை 15 லட்சம் பேர் நேரில் பார்த்தனர். இது 'லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இங்கு வெப்ப அலையால் 5 பேர் பலி.
சபாஷ் அதிஷி
செப்.17: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா. புதிய முதல்வராக அதிஷி (ஆம் ஆத்மி) பதவியேற்பு.
அரசியலில் விஜய்
அக்.27: நடிகர் விஜய் கட்சியின் (தமிழக வெற்றிக் கழகம்) முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது.
முதல் அனுபவம்
செப்.16: இந்தியாவின் முதல் 'வந்தே மெட்ரோ' ரயில் குஜராத்தில் துவக்கம்
டாப் - 3
செப். 20: திருப்பதி லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக தேவஸ்தானம் அறிவிப்பு.
அக். 16: காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பதவியேற்பு.
செப். 23: இலங்கை அதிபராக ஜே.வி.பி., கட்சியின் அனுர குமார திசநாயகே 56, பதவியேற்பு.