PUBLISHED ON : ஜன 01, 2025

தமிழகம்
நவ.9: முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.
*மக்களை தேடி மருத்துவ திட்டத்துக்கு ஐ.நா., விருது.
*முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் 66, காலமானார்.
நவ.10: பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்.
நவ.13: சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை, நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். டாக்டர்கள் வேலை நிறுத்தம்.
நவ.18: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி.
நவ.20: தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில், காதலன் மதன்குமார் கத்தியால் குத்தியதில் தற்காலிக ஆசிரியர் ரமணி பலி.
நவ.21: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு. நடிகை கஸ்துாரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமின்.
இந்தியா
நவ.5: இலக ரக வாகன லைசென்ஸ் வைத்திருப்பவர் 7500 கிலோ எடையுள்ள வாகனத்தை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
நவ.6: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
நவ.8: இந்தியா - பூடான் எல்லையில் முதல் ஒருங்கிணைந்த செக்போஸ்ட் தொடக்கம்.
நவ.9: கார்பன் டை ஆக்சைடை மெத்தனாலாக மாற்றும் உலகின் முதல் ஆலை உ.பி., விந்தயாச்சலில் துவக்கம்.
*உ.பி., அலிகார் முஸ்லிம் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது உச்சநீதிமன்றம்.
*திரிபுராவில் பெட்ரோலுக்கு தட்டுப் பாடு. ரேஷன் முறையில் விநியோகம்.
*ஆந்திராவில் விஜயவாடா - ஸ்ரீசைலம் கடல் விமான சேவை சோதனை வெற்றி.
நவ.11: மணிப்பூரில் துணை ராணுவ படையால், 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
நவ.12: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.), முதல் முறையாக பெண் பிரிவு அமைக்க மத்திய அரசு அனுமதி.
நவ.13: குற்றம்சாட்டப்பட்டவர் வீட்டை 'புல்டோசரால்' இடிக்க, அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
நவ.14: அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளி துளசி கப்பார்ட் நியமனம்.
நவ.18: கேரளாவில் ஒரு கி.மீ., துாரத்துக்கு ஆம்புலன்சிற்கு வழி விடாமல் சென்ற கார் டிரைவருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்.
நவ.22: ஹரியானாவின் சோனிபட்டில் அரசியலமைப்பு அருங்காட்சியகம் திறப்பு.
நவ.23: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி வெற்றி. ஜார்க்கண்ட்டில் ஜே.எம்.எம்., - காங்., கூட்டணி வெற்றி. ஆட்சியை தக்க வைத்தன.
நவ.24: உபி., யின் சம்பல் நகரில் உள்ள மசூதியை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்ப்பு. கலவரத்தில் 3 பேர் பலி.
நவ.26: அரசியல் சாசனம் அமலான 75வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.
*வயநாடு தொகுதியில் வென்ற காங்., பொதுச் செயலர் பிரியங்கா எம்.பி.,யாக பதவியேற்பு.
நவ.28: ஜார்க்கண்ட் முதல்வராக ஜே.எம்.எம்., கட்சியின் ஹேமந்த் சோரன் பதவியேற்பு.
*அணுசக்தியில் இயங்கும் ஐ.என்.எஸ்., அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதம் ஏந்தி செல்லும் 'கே4' ஏவுகணை சோதனை வெற்றி
உலகம்
நவ.9: பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல். 27 பேர் பலி.
நவ.10: இந்தியாவால் தேடப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஷ் தல்லா, கனடாவில் கைது.
நவ.13: அமெரிக்க அரசின் நிர்வாக சீரமைப்புக்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க், விவேக் ராமசாமி தலைமையில் தனி துறை. புதிய அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்ப் அறிவிப்பு.
நவ.15: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, 225 இடங்களில் 159ல் வென்று பெரும்பான்மை பெற்றது.
நவ.18: இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு.
நவ.19: பிரேசிலின் ரியோவில் நடந்த 19வது 'ஜி - 20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
*2022 பிப். 24ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் 1000 நாட்களை கடந்தது.
நவ.21: போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன் யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் வாரன்ட்.
*இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில், தொழிலதிபர் கவுதம் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் கைது வாரன்ட்.
நவ.27: இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்.
கலங்கரை காண...
நவ.10: ராமநாதபுரம் பாம்பனில் 122 ஆண்டு கால கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.
வினோத விமானம்
நவ.11: சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கேரளாவின் கொச்சி - மூணாறு இடையே கடல் விமான சோதனை வெற்றி.
பிரியமானவர்
நவ.26: வயநாடு லோக்சபா தொகுதியில் வென்ற காங்., பொதுச்செயலர் பிரியங்கா எம்.பி.,யாக பதவியேற்பு.
உயரமான காற்றாலை
நவ.20: சீனாவின் புஜியான் மாகாணத்தில் உலகின் உயரமான (1115 அடி) காற்றாலை அமைப்பு.
'வின்னர்' விக்டோரியா
நவ.16: டென்மார்க்கின் விக்டோரியாகேர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றார்.
டாப் - 3
நவ 11: உச்சநீதிமன்ற 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு.
நவ 6: அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்ப் 312ல் வென்று அதிபரானார். ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் (226 இடம்) தோல்வி.
நவ 24: சிட்டுக்குருவியை பாதுகாக்கும் சென்னை 'கூடுகள்' அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு.