PUBLISHED ON : ஜன 01, 2025

தமிழகம்
டிச.3: வெள்ளம் பாதித்த விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 2000 நிவாரணம்.
டிச.6: தஞ்சாவூர், தேனியில் கேந்திரிய வித்யாலா பள்ளிக்கு மத்திய அரசு ஒப்புதல்.
டிச.7: இந்தியாவின் முதல் 'ஹைபர் லுாப்' சோதனை டிராக் (410 மீட்டர்)-ஐ சென்னை ஐ.ஐ.டி., அமைத்தது.
டிச.9: மேலுாரில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
*வி.சி.க.,வில் இருந்து துணைப் பொதுசெயலர் ஆதவ் அர்ஜூனா நீக்கம்.
டிச.12: திண்டுக்கல் சிட்டி மருத்துவ மனை தீ விபத்தில் 6 பேர் பலி.
டிச.16: ஜீயர்கள் குறித்து அவதுாறாக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது. டிச. 24ல் ஜாமின்
டிச.23: திருநெல்வேலி நடுக்கல்லுார், பழவூர் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை நீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசு அகற்றியது.
டிச.25: அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயது பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்தில் நடைபாதை பிரியாணி கடை நடத்திய ஞானசேகரன் கைது.
இந்தியா
டிச.2: புதுச்சேரியில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ. 5000 வெள்ள நிவாரணம்.
டிச.4: பஞ்சாப் பொற்கோயிலில் சிரோமணி அகாலி தள தலைவர், முன்னாள் துணை முதல்வர் சுக்பர் சிங் பாதலை, துப்பாக்கியால் சுட முயன்ற காலிஸ்தான் முன்னாள் பயங்கரவாதி நரேன் சிங் கைது.
டிச.5: மஹாராஷ்டிர முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே(சிவசேனா), அஜித் பவார் (தேசியவாத காங்.,) பதவியேற்பு.
டிச.6: சைகை மொழி பயன் பாட்டாளர்களுக்கான 'பி.எம் இ-வித்யா டிவி' சேனல் துவக்கம்.
டிச.7: டிச. 21ல் சர்வதேச தியான தினம். ஐ.நா., ஒப்புதல்.
*விடுதலை புலிகள் அமைப்பின் மீது, மத்திய அரசு விதித்த ஐந்தாண்டு தடை செல்லும் என டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் உத்தரவு.
டிச.8: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் காலமானார்.
டிச.10: ஜெர்மன் குடியுரிமையை மறைத்து 3 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த, தெலுங்கானா பி.ஆர்.எஸ்., கட்சியின் சென்னமனேனி ரமேஷின் இந்திய குடியுரிமையை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
டிச.17: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் தாக்கல். பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
*பயண ஏஜன்டால் தவறாக பாகிஸ்தானில் விடப்பட்ட ஹமிதா பானோ, 22 ஆண்டுக்குப்பின் இந்தியா திரும்பினார்.
டிச.18: மும்பையில் 'கேட்வே ஆப் இந்தியா' பகுதியில் இருந்து 'எலிபெண்டா' தீவுக்கு சென்ற பயணிகள் படகு மீது, கப்பல்படை படகு மோதியதில் 13 பேர் பலி.
டிச.22: பிரதமர் மோடி குவைத் பயணம்.
டிச.23: தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்.
*ஐந்து - எட்டாம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி என்ற கொள்கையை மத்திய அரசு ரத்து செய்தது.
உலகம்
டிச.1: அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.,) இயக்குனராக இந்திய வம்சாவளி காஷ்யப் படேல் நியமனம்.
டிச.2: கினி நாட்டில் கால்பந்து போட்டியில் மோதல். நெரிசலில் 56 ரசிகர்கள் பலி.
*குற்ற வழக்கில் சிக்கிய தன் மகன் ஹன்டருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
டிச.5: பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி. அரசு கவிழ்ந்தது.
டிச.11: சிரியாவின் இடைக்கால பிரதமராக முஹமது அல் பஷீர் பதவியேற்பு.
டிச.12: 'டைம்' இதழின் 2024க்கான சிறந்த நபராக அமெரிக்காவின் அடுத்த அதிபரான டிரம்ப் தேர்வு.
டிச.13: பிரான்ஸ் புதிய பிரதமராக பிரான்காய்ஸ் பாய்ரவ் பதவியேற்பு.
டிச.14: தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த அதிபர் யூன் சுக் இயோல், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கம்.
டிச.15: டில்லியில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் அனுரா திசநாயகே சந்திப்பு.
டிச.17: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஸ்கூட்டரில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் அந்நாட்டின் அணு, ரசாயன பாதுகாப்பு படை தளபதி இகோர் கிரில்லோவ் பலி.
டிச.21: பிரேசிலின் மினரஸ் நகரில் பல வாகனங்கள் மோதல். 41 பேர் பலி.
டிச.23: ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பும்படி இந்தியாவுக்கு, வங்கதேச அரசு கடிதம்.
*'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்துக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தமிழகத்தில் பிறந்த ஸ்ரீராம் நியமனம்.
டிரோன் தாக்குதல்
டிச.21: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் பாணியில், ரஷ்யாவின் காஷன் நகரில் கட்டடத்தின் மீது, உக்ரைன் 1000 கி.மீ., துாரத்தில் இருந்து டிரோன் தாக்குதலை நடத்தியது.
'பெஞ்சல்' புயல்
டிச.1: 'பெஞ்சல்' புயல் புதுச்சேரி -மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. மழை வெள்ளத்தால் விழுப்புரம் உட்பட வட மாவட்டங்கள் பாதித்தன. உள்படம்: திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் பலி.
அ.தி.மு.க., போராட்டம்
டிச. 30: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவில் போராட்டம் நடந்தது.
சிரியா போரில் திருப்பம்
டிச.7: சிரியாவில் 13 ஆண்டாக நடந்த உள்நாட்டுப் போரில் தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது 'ஹயாத் தஹ்ரிர் அல்ஷாம்' கிளர்ச்சிப்படை. அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்.
குமரியில் கண்ணாடி பாலம்
டிச. 30 : கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் திறப்பு. நீளம் 253 அடி. அகலம் 33 அடி.
டாப் - 3
டிச. 11: ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்பு.
டிச. 19: புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது. 2025ல் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என அறிவித்தது.
டிச. 20: நுாறு சதவீத சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தும் முதல் எல்லை கிராமம் ஆனது மசாலி. 40 கி.மீ., துாரத்தில் பாக்., எல்லை உள்ளது.