sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வருடமலர்/2024 ல் நடந்த நிகழ்வுகளின் ஆல்பம்

2024 ல் நடந்த நிகழ்வுகளின் ஆல்பம்

2024 ல் நடந்த நிகழ்வுகளின் ஆல்பம்


PUBLISHED ON : ஜன 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நனவான 500 ஆண்டு கனவு

ஜன. 22: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கருவறையில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதிசய பாதை

மார்ச் 9: அருணாசல பிரதேசத்தில் உலகின் உயரமான இடத்தில் (13,000 அடி) அமைக்கப்பட்ட இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி துவக்கினார்.

ஓயாத இஸ்ரேல் - பாலஸ்தீன போர்

நவ. 3: ஓராண்டுக்கு மேலாக காசாவில் ஹமாஸ், மறுபுறம் லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்கிறது. காசாவில் 15 ஆயிரம், இஸ்ரேலில் 950 பேர் பலியாகினர்.

வங்கக்கடல் அதிசயம்

டிச. 5: ராமேஸ்வரம் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் ( நீளம் 2.08 கி.மீ.,) பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்தது. இது நாட்டின் முதல் செங்குத்து துாக்குப்பாலம். செலவு ரூ. 500 கோடி.

நொறுங்கிய விமானம்

டிச. 29: தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து தென் கொரியாவின் முவான் சென்ற விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்தது. 179 பேர் பலி.

வாடிய வயநாடு

ஜூலை 30: கேரளாவின் வயநாடு முண்டக்கை, சூரல்மலை கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு. 420 பேர் பலி. வீடுகள் மண்ணில் புதைய காலி நிலமாக மாறியது.

அழகின் சிரிப்பு...

அக். 16: 'மிஸ் இந்தியா 2024' பட்டம் வென்றார் ம.பி.,யின் நிகிதா போர்வால்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us